Last Updated : 15 May, 2015 10:30 AM

 

Published : 15 May 2015 10:30 AM
Last Updated : 15 May 2015 10:30 AM

மாங்குரோவ் காடுகளில் மலேரியா நோய்க்கு மருந்து: புதுவித ஆராய்ச்சியில் `வின்ஸ்டோர்ம்’

கடல் அரிப்பைத் தடுக்கவும், சுனாமிப் பேரழிவிலிருந்து மனித குலத்தை காப்பாற்றவும் முக்கியமான ஒரே வழி மாங்குரோவ் காடுகள் வளர்ப்புதான். 2004 டிச. 26-ம் தேதி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலி கொண்ட சுனாமி ஏற்பட்ட பிறகு, மாங்கு ரோவ் குறித்த விழிப்புணர்வு தீவிரமடைந்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் மாங் குரோவ் காடுகள் அழிந்ததன் கார ணம் குறித்தும், அவற்றை மீண்டும் உருவாக்குவது குறித்தும் இந்திய விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சி களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மாங்குரோவ் மரங்களில் கிடைக்கும் பூஞ்சை (fungus) மலேரியாவுக்கு மருந்தா கும் வாய்ப்பு உள்ளதாக கண்டு பிடித்திருக்கிறார்கள் சென்னை ராமகிருஷ்ணா மிஷன் வித்யா பீடத்தை சேர்ந்த வின்ஸ்டோர்ம் (vinstrom- Vivekanantha institute of tropical mycology) ஆய்வுக் குழு வினர். 10 ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சியின் பலன், மனித குலத் துக்குப் பயன்படும் வகையில், அடுத்த கட்ட ஆராய்ச்சியை முடுக்கி விட தங்கள் கண்டுபிடிப்பை டெல்லி யில் உள்ள ICGEB (International Centre for Genetic Engineering & Biotechnology) மையத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதுகுறித்து கோவையில் வசிக் கும் வின்ஸ்டோர்ம் அமைப்பின் இயக்குநர் டாக்டர் டி.எஸ்.சூர்ய நாராயணனன் கூறியதாவது: வின்ஸ்டோர்ம் மையம் 10 ஆண்டு களுக்கும் மேலாக ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக் கும் அமைப்பாக செயல்படுகிறது. இந்திய அளவிலான புதிய அறி வியல் கண்டுபிடிப்புகளுக்கு உறு துணையாகவும், மனிதகுலத்தை காக்கும் நோக்கோடும் உருவாக் கப்பட்டது இந்த அமைப்பு.

ஒவ்வொரு தாவரங்களிலும் உள்ள பூஞ்சை நுண்ணுயிரிகளை ஆராய்ச்சி செய்வது, அதில் உயிர்க் கொல்லி நோய்களான எய்ட்ஸ் முதல் காலரா, மலேரியா நோய்க் கிருமிகளை அழிக்கும் தன்மை எதற்கு இருக்கிறது என் பதை ஆய்வதும் எங்க ளது பணி.

அந்த வகையில் ICGEB மையத்துடன் இணைந்து அபூர்வ தன்மைகள் கொண்ட மாங்குரோவ் மரங்களில் உள்ள நுண்ணுயிரிகள், அது கட்டுப்படுத்தும் நோய்கள் பற்றிய ஆய்வில் இறங்கினோம். தமிழ்நாட்டில் பிச்சாவரம் மாங் குரோவ் காடுகளில் ஆய்வு செய்த தில் சுமார் 120 வகையான பூஞ்சை கள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 30 வகையான பூஞ்சைகள் மட்டும் பயன்பாட்டுக்கு உள்ளவையாக கண்டறிந்து சோதனைக் குழாய் களில் இட்டு வளர்க்கப்பட்டன.

அவை வெளியிடும் ரசாயனக் கூறுகள் பண்படுத்தப்பட்டு எங்க ளிடம் இருந்த காலரா, மலேரியா போன்ற கிருமிகள் வளரும் ரத்த அணுக்கள் மாதிரிகளில் விடப்பட்டு சோதிக்கப்பட்டது. அதில் குறிப் பிட்ட வகையான பூஞ்சை நுண்ணு யிரிகள் மட்டும் சில ரத்த சிவப் பணுக்களை துளியும் பாதிக்காமல், மலேரியா நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கக் கூடியவையாக கண்டறியப்பட்டன. அந்த மாதிரி களை எடுத்து ICGEB மையத்துக்கு அனுப்பியுள்ளோம்.

எங்களுடைய இந்தப் பணி, ஒரு நோய்க்கு மருந்து கண்டு பிடிப்பதற்கான அடிப்படையில் உள்ள ஆரம்ப நிலையே ஆகும். அடுத்து, டெல்லியில் உள்ள மையம்தான் அதை பயன்படுத்தி பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி மருந்து உருவாக்கும் முயற்சியில் இறங்கும். அதற்கு இன்னமும் 10 முதல் 15 ஆண்டுகள் கூட பிடிக்கும்’ என்றார்.

டாக்டர் சூர்யநாராயணன், அருணாச்சல பிரதேசம், அசாம் மாநில பல்கலை.களில் கவுரவப் பேராசிரியராகவும், ஜெர்மன், கனடா பல்கலை.களில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பேராசிரியராகவும் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x