Published : 02 May 2015 09:48 AM
Last Updated : 02 May 2015 09:48 AM

காஞ்சி, திருத்தணியில் புதிய குடிநீர்த் திட்டங்கள் தேவை: கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை

தொழிலாளர் தினத்தையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 633 ஊராட்சிகளிலும், திருத்தணி அருகே உள்ள கார்த்திகேயபுரம் ஊராட்சியிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நேற்று நடைபெற்றன.

காஞ்சிபுரம் ஒன்றியம், சிறு காவேரிப்பாக்கம் மற்றும் வாலாஜா பாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் சண்முகம் பங்கேற் றார். அப்போது, முதியோர் உதவித் தொகை உட்பட பல்வேறு கோரிக் கைகள் தொடர்பாக ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

தொடர்ந்து, குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, குறைந்தபட்ச குடிநீர் தேவையையாவது நிறைவு செய் யும் வகையில் புதிய குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் பழுதடைந்த குடிநீர் குழாய்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

மேலும், சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள், சமூகப் பொருளா தார- சாதி வாரி கணக்கெடுப்பு வரைவு பட்டியல் மீது பொது மக்களின் மறுப்புகள் மற்றும் கோரிக்கை தொடர்பான மனுக்கள் வழங்கப்பட்டன.

ஊராட்சிப் பகுதிகளில் ஆழ் துளை கிணறுகள் அமைப்பது குறித்தும், திடக்கழிவு மேலாண் மைத் திட்ட பணிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உட்பட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருத்தணியில்...

திருத்தணி அருகே உள்ள கார்த்தி கேயபுரம் ஊராட்சியில் நேற்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், திருத்தணி எம்எல்ஏ அருண் சுப்பிரமணியம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஜாகீர் உசேன், திருத்தணி கோட்டாட்சியர் சேதுமாதவன், புதுவாழ்வு திட்ட மேலாளர் சிவகாமி கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

ஊராட்சித் தலைவர் வெங்க டேசலு தலைமையில் நடந்த இந்த கிராம சபைக் கூட்டத்தில், கோடை காலத்தில் ஊராட்சி பகுதிகளில் போதிய குடிநீர் விநியோகம் செய்வது, ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பொதுசுகாதாரம், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், தாய் திட்டம் 2015-16, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பாரத பிரதமர் கிராம சாலை திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x