Last Updated : 15 Apr, 2015 09:45 AM

 

Published : 15 Apr 2015 09:45 AM
Last Updated : 15 Apr 2015 09:45 AM

அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவர் பற்றாக்குறை பட்டாவுக்காக ஆண்டுக்கணக்கில் அலையும் மக்கள்: ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேக்கம்

அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவ லகத்தில் நில அளவர் பற்றாக்குறை யால் பட்டா பெயர் மாற்றம் கோரி விண்ணப்பிக்கப்படும் ஆயிரக் கணக்கான மனுக்கள் ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போடப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பட்டா பெயர் மாற்றம் செய் வதற்கான கால அவகாசம் அதிக பட்சம் 30 நாட்கள் என அரசு நிர்ணயித்துள்ளது. இதில் அம் பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத் துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளதோ என சந்தேகம் எழுகிறது. காரணம் பட்டா பெயர் மாற்றக்கோரி விண்ணப்பித்தால் ஓர் ஆண்டும் அல்லது அதற்கு மேலும் ஆகிறது. அதேநேரம் சாதாரண பொதுமக்களுக்குத்தான் இந்த நிலை. பணம் படைத்தவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்றால் அரசு நிர்ணயித்துள்ள 30 நாட்கள் அல்ல மூன்று நாட்களில் கூட வேலை முடிந்துவிடும் என புகார் கூறப்படுகிறது.

அம்பத்தூர் வட்டாட்சியர் எல் லைக்குள் சென்னை மாநகராட்சி பகுதிகளான அம்பத்தூர், ஆவடி நகராட்சி மற்றும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய பகுதிகள் அடங் கியுள்ளன. இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தால் ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அம்பத்தூர் சென்னை மாநகராட் சியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், நிலங்களின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. எனவே, பல ஆண்டுகளுக்கு முன் குறைந்த விலையில் வாங்கப்பட்ட நிலங் களில் வீடு கட்டவும், அதனை பாது காத்துக் கொள்ளவும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

அதற்கு, பட்டா மாறுதல் அவசியம் என்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வட்டாட் சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கின்றனர். அரசு அறிவித்துள்ளபடி உட்பிரிவுக்குட் பட்ட பட்டா மாறுதல் ஒரு மாதத் துக்குள்ளும், உட்பிரிவு இல்லா பட்டா மாறுதல்களை 15 நாட்களுக் குள்ளும் அளிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறு வதில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சியின் 91- வது வார்டு கவுன்சிலர் பி.வி.தமிழ்ச்செல்வன், ‘அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓராண்டுக்கு மேலாக பட்டா மாறு தலுக்காக பொதுமக்கள் காத்திருக் கிறார்கள்’ என்று கூறினார்.

நில அளவர் பற்றாக்குறை

பட்டாவுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்கள், பல முறை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு படையெடுத்தாலும் முறையான பதில் சொல்வதில்லை. வருவாய்த் துறை உயரதிகாரிகளிடம் கேட்டால், நில அளவர் பற்றாக்குறை என் கின்றனர். அதே நேரம் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் புரோக்கர்கள், பட்டா மாறுதலுக் காக விண்ணப்பித்தால் அவை உடனே பரிசீலிக்கப்பட்டு பட்டா தரப்படுகிறது என்றனர்.

இப்பிரச்சினை குறித்து வரு வாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘ 12 லட்சம் மக்கள் வசிக்கும் அம்பத்தூர் வட்டத்துக்கு 9 நில அளவர்கள் தேவை. அவர்கள் தான் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று நிலத்தை அளந்து பார்த்து சான்றளிக்க வேண்டும்.

ஆனால் கடந்த சில ஆண்டு களாக, பணியில் இருப்பதோ 3 பேர்தான். நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட பட்டா மனுக்கள் வருகின்றன. இந்த 3 பேரைக்கொண்டு இத்தனை பட்டா விண்ணப்பங்களை கையாள முடியாது. இதனால் பணியின் தன்மை கருதி வட்ட சார் ஆய்வாளர், தலைமை நில அளவர், சீனியர் ட்ராப்ட்ஸ் மேன் ஆகியோரும் கூட பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதனால்தான் தினமும் 80 பட்டாக்கள் வரை விநியோகிக்க முடிகிறது. போதுமான அளவில் நில அளவர்களை அரசு நியமித் தால்தான் தாமதமின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு பட்டா வழங்க முடியும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x