Published : 29 Apr 2015 08:39 AM
Last Updated : 29 Apr 2015 08:39 AM

நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று பெரிய கோயில் தேரோட்டம்: விழாக்கோலம் பூண்டது தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோயிலில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளதால், மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

பெரிய கோயில் சித்திரைப் பெருவிழாவின் 15-ம் நாளான இன்று (ஏப்.29) காலை 5.30 மணியளவில் தியாகராஜர் பஞ்ச மூர்த்திகளுடன் பெரிய கோயிலில் இருந்து வாகனத்தில் புறப்பட்டு தேர் மண்டபம் வந்தடைந்து, தேரில் எழுந்தருளுகிறார். காலை 6 மணிக்கு மேல் தேர் வடம் பிடிக்கப்படுகிறது.

மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி வழியாக மேல ராஜ வீதியில் அமைந்துள்ள தேரேற்றுக்கூடத்தை தேர் வந்தடையும். தேரோட்டத்தின் போது மக்கள் சிரமமின்றி அர்ச் சனை செய்வதற்காக நான்கு ராஜ வீதிகளிலும் உள்ள 8 கோயில்களின் முன்பும் தேர் நிறுத்தப்படும்.

இந்தத் தேரோட்டம் நூறாண்டு களுக்குப் பிறகு நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி தஞ்சை மாநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தேரோட்டத்துக்காக சாலைகள் புதுப்பிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறை சார்பில் தோரோட்டத்துக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x