Published : 09 Apr 2015 09:49 AM
Last Updated : 09 Apr 2015 09:49 AM

பேரூராட்சி அலுவலக உதவியாளர் தற்கொலை: அதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என கடிதம் சிக்கியது

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலக உதவியாளர், அலுவலக சூழல்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கம்பைநல்லூர் தங்கவேல் நகரைச் சேர்ந்தவர் ஆதி(45). கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலக அலுவலக உதவியாளர். நேற்று முன்தினம் அவரது மனைவி கீதா மற்றும் 3 மகன்களும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றனர். ஆதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. ஆதியின் சகோதரர் பெருமாள் சென்று பார்த்தபோது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. போலீஸார் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது ஆதி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், ‘என் மரணத்துக்கு பேரூராட்சி பணியாற் றும் சிலர் தான் காரணம்’ என்று பெயர் குறிப்பிட்டு எழுதி வைக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆதியின் மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் காரணமானவர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்பைநல்லூர் காவல்நிலையத்தில் பெருமாள் புகார் அளித்துள்ளார்.

இறப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண் டும் என வலியுறுத்தி ஆதியின் உறவினர்கள் சாலைமறியலுக்கு முயன்றனர். பின்னர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x