சென்னையில் இணை ஆணையர் உட்பட ஒரே நாளில் 40 போலீஸார் பணி ஓய்வு

சென்னையில் இணை ஆணையர் உட்பட ஒரே நாளில் 40 போலீஸார் பணி ஓய்வு
Updated on
1 min read

சென்னை: இணை ஆணை​யர் உட்பட சென்​னை​யில் ஒரே நாளில் 40 போலீஸார் பணி ஓய்வு பெற்​றனர். சென்னை காவல் துறை​யில்,தலை​மை​யிடத்து இணை ஆணை​ய​ராக எஸ்​.மகேஸ்​வரன் பணி​யாற்றி வந்​தார்.

இவர் மற்​றும் உதவி ஆணை​யர் ராஜா, காவல் ஆய்​வாளர் ஹரி​தாஸ் மற்​றும் 16 காவல் உதவி ஆய்​வாளர்​கள், 20 சிறப்பு உதவி ஆய்​வாளர்​கள் மற்​றும் 1 பெண் தலைமைக் காவலர் என மொத்​தம் 40 போலீ​ஸார் நேற்​றுடன் பணி ஓய்வு பெற்​றனர்.

இவர்​களுக்​கான பணி நிறை வுபாராட்டு விழா, வேப்​பேரி​யில் உள்ள காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.காவல் ஆணை​யர் அபின் தினேஷ் மோடக், பணி ஓய்வு பெற்ற 40 பேருக்​கும் பொன்​னாடை போர்த்​தி, பாராட்டி சான்​றிதழ்​களை வழங்கி பாராட்​டி​னார்.

பணி ஓய்வு பெற்ற போலீ​ஸார், 22 ஆண்​டு​கள் முதல் 41 ஆண்​டு​கள் வரை சிறப்​பாக பணிபுரிந்​துள்​ளனர். அவர்​களால் தமிழக காவல்​துறைக்​கும், சென்னை பெருநகர காவல்​துறைக்​கும் பெருமை கிடைத்​துள்​ளது.

ஓய்வு பெறுகின்ற காவல் ​துறை​யினர் தங்​களது உடல் நலனில் அக்​கறை செலுத்த வேண்​டும் என காவல் ஆணை​யர் தெரி​வித்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில், காவல் கூடு​தல் ஆணை​யர் (தலை​மை​யிடம்) ஜோஷி நிர்​மல் குமார், துணை ஆணை​யர்​கள் சுப்​பு லட்​சுமி, கண்​ணன் உட்​பட பலர் பங்கேற்றனர்.

சென்னையில் இணை ஆணையர் உட்பட ஒரே நாளில் 40 போலீஸார் பணி ஓய்வு
சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in