சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்

சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்
Updated on
1 min read

சென்னை: உழைப்​பாளர் தினத்தை ஒட்டி, மெட்ரோ ரயில்​கள் இன்று ஞாயிற்​றுக்​கிழமை அட்​ட​வணைப்​படி இயக்​கப்​படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

உழைப்​பாளர் தினம் இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதை ஒட்டி, இன்று (1-ம் தேதி) அரசு விடு​முறை தினம் என்​ப​தால், மெட்ரோ ரயில்​களில் பயணம் செய்​வோரின் எண்​ணிக்கை குறை​யும் என எதிர்​பார்க்கப்​படு​கிறது.

7, 10, 15 நிமிட இடைவெளி

எனவே இன்று ஞாயிற்​றுக்​கிழமை அட்​ட​வணைப்​படி மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படும் என்று மெட்ரோ ரயில் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்​து, அந்​நிறு​வனம் வெளி​யிட்ட பதிவு: சர்​வ​தேச உழைப்​பாளர் தினத்தை ஒட்டி, ஞாயிற்​றுக்​கிழமை கால அட்​ட​வணைப்​படி, இன்று மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படும்.

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்​கப்​படும். காலை 5 மணி முதல் நண்​பகல் 12 மணி வரை​யும், இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை​யும் 10 நிமிட இடைவெளி​யில் மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படும்.

நண்​பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளி​யில் மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படும். இரவு 10 மணி முதல் 11 மணிவரை 15 நிமிட இடைவெளி​யில் மெட்ரோ ரயில்​கள் இயக்கப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்
சென்னை | பரதநாட்டியம் பயில சென்ற இடத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in