Published : 02 Apr 2015 09:20 AM
Last Updated : 02 Apr 2015 09:20 AM

இந்தியாவின் சிறந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு மையமாக ஐசிஎஃப் தேர்வு

இந்தியாவிலேயே சிறந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு மையமாக ஐசிஎஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டில் 1704 ரயில் பெட்டிகளை தயாரித்துள்ளது.

இது தொடர்பாக ஐசிஎஃப் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஐசிஎஃப் நிறுவனம் இந்த தயாரிப்பு ஆண்டில் 1696 ரயில் பெட்டிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில் 1704 பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த தயாரிப்பு ஆண்டில் 239 டீசல் மின்சார பல அலகு பெட்டிகளையும், 283 ஏ.சி பெட்டிகளையும், 65 எல்.எச்.பி பெட்டிகளையும், 693 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளையும், 170 முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட பெட்டிகளையும் ஐசிஎஃப் தயாரித்துள்ளது.

இரண்டாவது முறையாக..

மேலும் இந்தியாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு மையங்களிலேயே 2014-2015-ம் ஆண்டில் அனைத்து அம்சங்களிலும் சிறந்த தயாரிப்பு மையமாக ஐசிஎஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விருதை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு குவாஹாட்டியில் நடக்கவுள்ள மத்திய ரயில்வே வார விழாவில் வரும் 13-ம் தேதியன்று வழங்கவுள்ளார். இந்த விருதை ஐசிஎஃப் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பெறுகிறது.

இவ்வாறு ஐசிஎஃப் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x