Published : 02 May 2014 09:09 AM
Last Updated : 02 May 2014 09:09 AM

மதுவிலக்கு கோரி போராட்டம்: தமிழருவி மணியன் அறிவிப்பு

மதுவிலக்கு கோரி காந்திய மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் மாநிலம் தழுவிய போராட்டத்தில் பொன். ராதாகிருஷ்ணன், வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

மதுரையில் வியாழக்கிழமை நிருபர் களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இரட்டை அளவுகோலைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தியாவில் எங்குமே இல்லாத வகையில் 144 தடை உத்தரவை பிறப்பித்த தேர்தல் ஆணையம், பணப் பட்டுவாடாவைத் தடுப்பதற்குப் பதில் அதற்குத் துணைபோயிருக்கிறது. இந்தத் தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தங்களால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை என்று பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டு வருவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்திவரும், எங்களது காந்திய மக்கள் கட்சி ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளது.

இதில் பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தே.மு.தி.க.வை அழைக்கவில்லை. காரணம், அவர்கள் மதுவிலக்கு தொடர்பாக தங்கள் கருத்தை இன்னமும் தெளிவுபடுத்தவில்லை. பிரேமலதா ஓரிரு கூட்டங்களில் பேசியதை மட்டும் வைத்துக் கொண்டு அக்கட்சி மதுவிலக்குக்கு ஆதரவான கட்சி என்று முடிவுக்கு வர முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x