Published : 03 Apr 2015 11:11 AM
Last Updated : 03 Apr 2015 11:11 AM

சிலரது கைப்பாவையாக அமலாக்கப்பிரிவு நடவடிக்கை: தயாநிதி

சொத்துகளை முடக்கிய விவ காரத்தில் அமலாக்கத்துறை சட்ட விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, தயாநிதி மாறன் வெளியிட்ட அறிக்கை விவரம்:

மத்திய அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சொத்துகள் முடக்கம் குறித்து பட்டியல் வெளியிட்டுள் ளது. இது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளி யிடப்பட்டதாக தோன்றுகிறது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை இந்த சொத்து முடக்க விவகாரத்தில் சட்டவிதிகள் அனைத்தையும் மீறி செயல்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை தனது செய் திக் குறிப்பில், தயாநிதி மாறனுக்கு கொடுக்கப்பட்ட சட்டவிரோத கைமாற்றுக்குப் பெறப்பட்ட தொகையைக் கொண்டு வாங்கிய சொத்துகளை முடக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆஸ்ட்ரோ நிறுவனம், சன் டைரக்ட் டிவியிலும், சவுத் ஏசியா எப்.எம்.மிலும் முதலீடு செய்யத் தொடங்கியது 2007-ம் ஆண்டு இறுதி யில்தான் என அந்நிறுவனங்கள் தெளிவாக தெரிவித்துள்ளன. அப்படியிருக்க, அதற்கு முன்பாக பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப் பட்ட சொத்துக்களை இப்போது அமலாக்கத்துறை முடக்க முன் வந்துள்ளதாகக் கூறுவது விதிமுறைகளுக்கு எதிரானது.

2007-ம் ஆண்டு மார்ச் மாதம் நான் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி விட்டேன். ஆனால், 2007 இறுதியில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீட்டைத் தொடங்கியதாகக் கூறப்படும் போது, அந்தக் காலகட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை.

மேலும், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் இரு நிறுவனங்களுக்கு இடையே முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தி முறைப்படி நடைபெற்ற ஒப்பந்த விவகாரம். இதில் எவ்வித குற்றவியலும் இருக்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகளான காரே, கபாடியா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாயத்தில், சிவசங்கரனுக்கும், மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற வழக்கில், சிவசங்கரன் மேக்சிசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் சட்டப்படி நடந்த ஒன்று என்றும், அதில் எந்த தவறும் நடைபெறவில்லை எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. மொத்தத்தில், சொத்து முடக்கும் முயற்சி என்பது சட்டவிதிகளை மீறி யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதைத் தெளிவாக்குகிறது.

இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x