Last Updated : 09 Apr, 2015 10:58 AM

 

Published : 09 Apr 2015 10:58 AM
Last Updated : 09 Apr 2015 10:58 AM

செம்மரக் கடத்தல்: அப்பாவிகளை பலியாக்கும் ரவுடிகள்

செம்மரக் கடத்தலில் உள்ள உண்மைகளை மறைத்து அப்பாவிகளை கொன்றுள்ளனர் ஆந்திர மாநில போலீஸார்.

செம்மரம் ஒரு கிலோ ரூ.450க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக லாபம் தரும் தொழில் என்பதால் பல ரவுடிகள் இதில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தை சேர்ந்த சில ரவுடிகள் சர்வதேச அளவில் தொடர்பு வைத்துக் கொண்டு செம்மர கட்டைகள் கடத்தும் தொழிலை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பிரபல ரவுடிக ளாக இருந்த சின்னா என்ற சென்னகேசவலு, வெள்ளை உமா, கதிரவன், அப்பு ஆகியோர் செம் மரக் கட்டைகள் கடத்தல் தொழி லையே செய்துவந்தனர். அப்பு மட்டும் உடல் நலக்குறைவால் இறக்க மற்ற அனைவரும் செம்மரக் கடத்தல் தொழில் போட்டியில் உடனிருந்தவர்களால் கொலை செய்யப்பட்டனர். இவர் களுடன் தொழில் செய்த காது குத்து ரவி மட்டுமே தற்போது உயிருடன் இருக்கிறார். இவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவ ருக்கு கீழ் இருந்த நபர்கள் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து செம்மரங்கள் கடத்த லுக்கு கஸ்டம்ஸ் கிளியரன்ஸ், வெளிநாட்டு பணப் பரிமாற்றம் உட் பட பல வேலைகளை சரவணன் என்ற நபர் செய்து வருகிறார்.

சிங்கப்பூரை சேர்ந்த ஹனீபா, ராமநாதபுரத்தை சேர்ந்த ஷாகுல் அமீது ஆகியோர் மூலம்தான், தமிழகத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு செம்மரக் கட்டைகள் அனுப்பப்படுகின்றன.

செம்மரக் கடத்தலில் உள்ள இந்த தொடர்புகள் அனைத்தும் தமிழக போலீஸாருக்கு நன்றாக தெரியும். ஆனால் ஆதாரப்பூர்வ மாக யாரையும் கைது செய்வ தில்லை. அவ்வப்போது கணக்கு காட்டுவதற்காக சொகுசு வாகனங் கள் மற்றும் லாரிகளில் கடத்தப் பட்ட செம்மரக் கட்டைகளை பிடித்துவிட்டதாக தெரிவிப்பார் கள். ஆனால் அதனுடன் தொடர் புடைய யாரையும் போலீஸார் கைது செய்யமாட்டார்கள். போலீ ஸார் பிடிக்கும் செம்மரங்களில் ஒரு பகுதியை மட்டும் நீதி மன்றத்தில் ஒப்படைத்துவிட்டு, பெரும் பகுதியை போலீஸாரே விற்றுவிடுகின்றனர். நாங்கள் பிடித்தது கொஞ்சம்தான் என் பதை நிரூபிக்க சில பத்திரிகை களுக்கு புகைப்படம் கொடுத்து செய்தியையும் வெளிவர வைக்கின்றனர்.

தினக்கூலிக்கு அப்பாவிகள்

காட்டுக்குள் சென்று செம் மரங்களை வெட்டுவதற்காக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சேலம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்துதான் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். இவர்களை தேர்ந்தெடுப்பதற் கென்று பல இடைத்தரகர்கள் உள்ளனர். செம்மரம் கடத்தலில் ஈடுபடும் ரவுடிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும் நெருங் கிய தொடர்பு இருக்கும். மரம் வெட்டச் செல்லும் தொழிலாளர் களுக்கு ஒரு நாளுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே கூலியாக வழங்கப்படும். இத னால் வேலையில்லாமல் கஷ்டப் படும் நபர்களை சரியாக கண்டு பிடித்து அழைத்து செல்வதுதான் இடைத்தரகர்களின் வேலை.

இவர்கள் மரம் வெட்டும் தொழிலில் அனுபவம் பெற்றவர் களும் கிடையாது. குடும்பத்தை காப்பாற்ற ரூ.200 பணத்துக்காக இடைத்தரகர்களை நம்பிச் சென்ற அப்பாவிகள்.

சிக்காத இடைத்தரகர்கள்

காட்டில் மரம் வெட்டுவதில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் இடைத்தரகர்களுக்கும், இந்த தொழில் செய்யும் ரவுடிகளுக் கும் நன்றாக தெரியும். இதனால் மரங்கள் இருக்கும் இடம் வரை கூலித் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் இடைத் தரகர்கள் மற்றும் ரவுடிகள், ‘இவற்றை வெட்டி குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு வந்து விடுங்கள்’ என்று கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். இதனால் தான் என்கவுன்ட்டர் மற்றும் கைது நடவடிக்கைகள் எதிலும் இவர்கள் சிக்குவதில்லை.

செம்மரம் கடத்தல் தொழிலில் தொடர்புடைய இடைத்தரகர்கள், ரவுடிகளை அடையாளம் கண்டு பிடித்து கைது செய்தால் மறைக் கப்பட்டிருக்கும் பல உண்மைகள் வெளிவரும். கடந்த 11 ஆண்டுகளாக செம்மரக் கடத்தல் தொழில் செய்த மலியக்கல் மூசா என்பவரை ஆந்திர போலீஸார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் கைது செய்தனர். அவரிடம் சரியான முறையில் விசாரணை நடத்தினால்கூட இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல முக்கியப் புள்ளிகளை பிடிக்க முடியும்.

சென்னையில் இருந்து மணிப்பூர் சென்று செம்மரக் கடத்தலில் கொடிகட்டி பறக்கும் ஒருவரை பிடித்தால் இந்த தொழி லின் ஆணி வேரை பிடித்ததற்கு சமம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x