Published : 25 Apr 2015 11:27 AM
Last Updated : 25 Apr 2015 11:27 AM

இலக்கை மிஞ்சி சாதனை: 6.16 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி

திருநெல்வேலி மாவட்டத்தில் இலக்கை மிஞ்சி நடப்பாண்டு 6.16 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன’ என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 2014-2015-ம் ஆண்டில் பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு கூட்டத்தில் பரிசு வழங்கப்பட்டது.

நெற்பயிரில் பாப்பாக்குடி வட்டாரம் பள்ளக்கால் புதுக்குடியை சேர்ந்த க. மோகன்தாஸ் பிசான பருவத்தில் திருச்சி- 1 நெல் பயிரிட்டு மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஹெக்டேருக்கு 11,850 கிலோ மகசூல் பெற்று முதல் பரிசு பெற்றார். அவருக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அம்பாசமுத்திரம் வட்டம் மன்னார்கோவிலை சேர்ந்த இரா. ரெங்கநாதன் அம்பை- 16 நெல் பயிரிட்டு ஹெக்டேருக்கு 10,900 கிலோ மகசூல் பெற்று 2-ம் இடம்பெற்றார். அவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

கடையநல்லூர் வட்டாரம் நயினாகரம் கி. திருப்பதிராஜா என்.எஸ்.எச்.27 என்ற வீரிய ரக ஒட்டு சோளம் பயிரிட்டு ஹெக்டேருக்கு 9,804 கிலோ மகசூல் பெற்று முதலிடம் பெற்றார். அவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. செங்கோட்டை வட்டாரம் கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கே. கிருஷ்ணமூர்த்தி 2000 என்ற வீரிய ஒட்டு ரக சோளம் பயிரிட்டு ஹெக்டேருக்கு 9702 கிலோ மகசூல் பெற்று 2-ம் இடம்பெற்றார். அவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

குருவிகுளம் வட்டாரம் பெருங்கோட்டூரை சேர்ந்த இரா. சரஸ்வதி பயோனிர்- 3092 என்ற வீரிய ரக ஒட்டு மக்காச்சோளத்தை பயிரிட்டு ஹெக்டேருக்கு 12,535 கிலோ மகசூல் பெற்று முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் பெற்றார். சங்கரன்கோவிலை சேர்ந்த மு.வேலுச்சாமி என்.கே. 6240 என்ற வீரியரக ஒட்டு மக்காச்சோளம் பயிரிட்டு 10,680 கிலோ மகசூல் பெற்று 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் பெற்றார். மேலநீலிதநல்லூர் வட்டாரம் சொக்கநாச்சியாபுரத்தை சேர்ந்த க. கடற்கரை, வம்பன் 3 என்ற உளுந்து ரகத்தை பயிரிட்டு ஹெக்டேருக்கு 1,930 கிலோ மகசூல் எடுத்து முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் பெற்றார்.

இருசக்கர வாகனங்கள்

தமிழக கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் சில்லறை மீன் விற்பனையை மேம்படுத்தும் பொருட்டு தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஐஸ்பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் 25 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் திருநெல் வேலி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த சில்லறை மீன்விற்பனையில் ஈடுபடும் 32 உள்நாட்டு மீனவர்க ளுக்கு ஐஸ்பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

விவசாயிகள் சாதனை

கூட்டத்தில் பேசிய ஆட்சியர் மு.கருணாகரன், “திருநெல்வேலி மாவட்டத்தில் 2014-2015-ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி இலக்கான 6 லட்சம் மெட்ரிக் டன்னை விட அதிகமாக 6.16 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

நெற்பயிர் 85,407 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு 4.55 லட்சம் மெட்ரிக் டன்னும், சிறுதானிய பயிர்கள் 12,078 ஹெக் டேர் பரப்பில் சாகுபடி செய்யப் பட்டு 1.08 லட்சம் மெட்ரிக் டன்னும், பயறுவகை பயிர்கள் 33,196 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு 0.53 லட்சம் மெட்ரிக் டன்னும் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் 2014-2015-ம் ஆண்டில் மொத்தம் 2336 மனுக்கள் பெறப்பட்டு, அதற்கான பதில்கள் விவசாயி களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x