Published : 17 Apr 2015 10:14 AM
Last Updated : 17 Apr 2015 10:14 AM

கரும்பு விவசாயிகளுக்கு அரசே நேரடி மானியம் தர வேண்டும்: சர்க்கரை ஆலைகள் சங்கம் கோரிக்கை

கரும்பு விவசாயிகளுக்கு அரசே நேரடியாக மானியம் வழங்க வேண்டும் என்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் தலைமை இயக்குநர் அபினாஷ் வர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவில் சர்க்கரைத் தொழில் இதுவரை காணாத ஒரு நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. உற்பத்தி செலவு அதிகரித்து வரும் நிலையில் சர்க்கரை விலை குறைந்து கொண்டே வருகிறது. சர்க்கரைத் தொழிலுக்கு வங்கிகள் கடன் தர மறுப்பதால் வாழ்வா, சாவா என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தேவைக்கு அதிகமான உற்பத்தி

கடந்த 5 ஆண்டுகளாக உலக அள விலும், நம் நாட்டிலும் தேவைக்கு அதிகமான சர்க்கரை உற்பத்தி உள்ளது. 2014-15-ல் நாட்டின் சர்க்கரை கையிருப்பு 90 லட்சம் மெட்ரிக் டன்னாக அதாவது தேவையை விட 30 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்க்கரை விலை தொடர்ந்து சரிந்து வருவதால் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ. 9,000 வரை நஷ்டம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் கரும்புக்கான ஆதாய விலை 55 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தவிர தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அதிகமான பரிந்துரை விலையை அறிவித்து வருகின்றன. இதனால் உரிய நேரத்தில் கரும்புக் கான விலையைத் தர முடியாமல் ஆலைகள் திணறுகின்றன.

சர்க்கரை உற்பத்தியில் முன்ன ணியில் இருக்கும் மகாராஷ்டிரம், கர்நாடக மாநிலங்கள் சர்க்கரை விற்பனை விலையில் 75 சத வீதம் கரும்பின் விலையாக நிர்ண யித்துள்ளன. இதன்படி சர்க்கரை விலை அதிகரிக்கும்போது கரும் பின் விலையும் அதிகரிக்கும். சர்க்கரை விலை சரியும்போது விவசாயிகளுக்கு நியாயமான ஆதாய விலை கிடைக்கும்.

தமிழகத்தில் ஒரு டன் கரும்புக்கு பரிந்துரை விலையாக ரூ. 2,650 அறிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை விலைப்படி கணக்கிட்டால் டன் னுக்கு ரூ. 1,900 மட்டுமே தர வேண் டும். அதிகமாக தர வேண்டியதால் ஆலைகளின் நஷ்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ரூ. 19,000 கோடி நிலுவை

நாடு முழுவதும் கரும்பு விவசாயி களுக்கு ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 19,000 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே, வருவாய் பகிர்வின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதிகமாக விலை கொடுக்க விரும்பினால் அரசே விவசாயிகளுக்கு நேரடியாக மானியம் வழங்க வேண்டும்.

கையிருப்பில் உள்ள 30 லட்சம் டன் சர்க்கரையை மத்திய அரசு உற்பத்தி விலைக்கு கொள்முதல் செய்தால் மட்டுமே ரூ. 900 கோடி நிலுவைத் தொகையை வழங்க முடியும். சர்க்கரை விற்பனை மீதான 5 சதவீத வாட் வரியையும், எரிசாராயத்துக்கான 14.5 சதவீத வாட் வரியையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.15 முதல் ரூ.4.27 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை அதிகரிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே சர்க்கரைத் தொழிலைக் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அபினாஷ் வர்மா கூறினார். பேட்டியின்போது தென் னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத் தின் செயலாளர் எஸ். செல்லப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x