Published : 28 Apr 2015 09:58 AM
Last Updated : 28 Apr 2015 09:58 AM

திருவண்ணாமலை அருகே பயங்கரம்: மாணவியை செல்போனில் தொந்தரவு செய்தவர் எரித்துக் கொலை - செஞ்சி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

திருவண்ணாமலை அருகே கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் தொந்தரவு கொடுத்ததாக இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, செஞ்சி நீதிமன்றத் தில் 3 பேர் சரணடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அருகே உள்ள கோவில்மாதிமங்கலம் கிராமத் தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜெயகுமார்(24). இவர், பூவாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு அடிக்கடி பேசி தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்தப்பெண் வேலூரில் உள்ள தனியார் கல்லூரி யில் படிக்கின்றார். இதுகுறித்து, தனது தந்தையிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஜெயகுமார் வீட்டுக்கு மாணவியின் தந்தை ராஜா மற்றும் அவரது உறவி னர்கள் நேற்று முன்தினம் சென் றுள்ளனர். அப்போது அங்கு இருந்த அவரது தந்தை ராஜேந்தி ரனிடம் நடந்ததைக் கூறி கண் டித்துவிட்டு வீடு திரும்பினர். இதையடுத்து, ராஜா வீட்டுக் குச் சென்ற ஜெயகுமார் அங்கு தகராறு செய்ததாக கூறப் படுகிறது. அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

சந்தேகமடைந்த ஜெயகுமார் குடும்பத்தினர் தங்கள் மகனை ராஜா குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாக கடலாடி போலீஸில் புகார் செய்தனர்.

இதற்கிடையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ராஜாவின் தம்பி ராமு என்கிற ராமன் (33), பூவாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் கோபி (27), செல்வநாயகம் (29) ஆகியே 3 பேர் நேற்று சரண டைந்தனர். அப்போது அவர்கள், “ஜெயகுமாரை எரித்துக் கொலை செய்து, திருவண்ணாமலை மாவட் டம் காஞ்சி சாலையில் உள்ள படூர் காட்டுப் பகுதியில் வீசி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கடலூர் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ் திரேட் வரலட்சுமி உத்தரவு பிறப் பித்தார்’’ என்றனர்.

இதற்கிடையே பரூர் காட்டுப் பகுதியில் ஜெயகுமாரின் உடலை போலீஸார் மீட்டனர்.

சடலத்தை தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேதப் பரிசோத னைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x