Published : 29 Apr 2015 07:30 PM
Last Updated : 29 Apr 2015 07:30 PM

சுந்தரனார் பல்கலை.யில் பி.எச்டி. படிப்புக்கு தகுதித் தேர்வு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள பாடப்பிரிவுகளில் பி.எச்டி. முழு நேரம், பகுதி நேரம் படிப்பு பதிவுக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பல்கலைக்கழகப் பதிவாளர் ஜான் டி பிரிட்டோ நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

முனைவர் பட்டம் தொடர்பான பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதி, கட்டண விவரங்கள், தகுதித்தேர்வு தேர்வு மற்றும் அனுமதி நெறிமுறைகள் ஆகியவை பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இணையதள முகவரி: http://www.msuniv.ac.in.

M.Phil./ NET/ SET/ JRF/ GATE/ M.E./ M.Tech. போன்றவை தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தகுதித் தேர்விலிருந்து விலக் களிக்கப்படுகிறது. முதுகலையில் தேர்ச்சி பெற்றவர்கள், முனைவர் பட்டத்துக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தகுதித்தேர்வின் தேர்ச்சியானது 3 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும்.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தகுதி தேர்விலிருந்து விலக்குப் பெற்றவர்கள் வருடம் முழுவதும் முனைவர் பட்டப்பதிவுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு தனியாக விண்ணப்பம் அளித்து பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். அனுமதி நெறிமுறைகளில் கூறப்பட்ட அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தால் மட்டுமே முனைவர் பட்ட ஆய்வுக்கு பதிவு செய்ய முடியும். இதுகுறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முனைவர் பட்ட பதிவுக்கான தகுதித் தேர்வு கட்டண தொகை ரூ.750. இந்த தொகையை பதிவாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்ற பெயரில் திருநெல்வேலியில் மாற்றத்தக்க வகையிலான வங்கி வரைவோலையாகவோ அல்லது இந்தியன் வங்கி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கிளையின் செலுத்துச்சீட்டு மூலமாகவோ அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் பவர்ஜோதி கணக்கின் மூலமாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்கு எண் 327 236 06944-க்கு செலுத்து சீட்டு மூலமாகவும் செலுத்தலாம்.

முனைவர் பட்டத்துக்கான தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழக இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் சான்றளிக்கப்பட்ட உரிய சான்றிதழ்களின் ஒளி நகல்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் இணைத்து ஒருங்கிணைப்பாளர், ஆராய்ச்சிப் பிரிவு, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி- 627012 என்ற முகவரிக்கு வரும் 25.5.2015-ம் தேதி மாலை 5.30 மணிக்கு முன் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x