Last Updated : 09 Apr, 2015 11:09 AM

 

Published : 09 Apr 2015 11:09 AM
Last Updated : 09 Apr 2015 11:09 AM

தமாகாவில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு: ஏப். 24 பொதுக்குழுவில் அறிவிக்கிறார் ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் (தமாகா) முதல் பொதுக்குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

மேலிடத் தலைவர்களுடன் ஏற்பட்ட மோதலால் காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், கடந்த நவம்பர் 28-ம் தேதி திருச்சி யில் தமாகா என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே நிர்வாகிகளை நியமனம் செய்யாமல் முறைப்படி உறுப்பினர் சேர்க்கை நடத்தி நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என வாசன் தெரிவித்திருந்தார்.

அதன்படி கடந்த டிசம்பர் 11-ம் தேதி தொடங்கிய உறுப்பினர் சேர்க்கை கடந்த மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற்றது.

வாசனுக்கு 50 வயது என்பதால் 50 என்ற எண்ணை மையப்படுத்தி 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை பணிகள் முடிந் துள்ளதால் அடுத்தகட்டமாக கட்சியின் பொதுக்குழுவை அமைக்கும் பணியிலும், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் களை தேர்வு செய்யும் பணியில் வாசன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக பி.எஸ்.ஞானதேசி கன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மூத்த தலை வர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் வாசன், மாவட்டவாரியாக முக்கிய நிர்வாகி களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.

இது குறித்து தமாகா மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 63 லட்சம் உறுப்பினர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக இவை சேகரிக்கப்பட்டதும் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஓரிரு நாளில் வாசன் அறிவிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து வரும் 24-ம் தேதி சென்னை வானகரம் வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தமாகா முதல் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் யார் என்பது குறித்து வாசன் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

24-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் பொருளாளர், 6 மாநில துணைத் தலைவர்கள், 12 மாநிலப் பொதுச் செயலாளர்கள், 24 மாநிலச் செயலாளர்கள், 70 மாவட்டத் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கான பொறுப்பாளர்களின் பெயர்களை வாசன் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர் கள் என அனைத்துப் பொறுப்புகளிலும் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க வாசன் முடிவு செய்துள்ளதாகக் கூறப் படுகிறது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர் களைத் தவிர புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை கட்சிப் பொறுப்புகளை வழங்கவும் அவர் முடிவு செய் துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x