Published : 11 Apr 2015 10:43 AM
Last Updated : 11 Apr 2015 10:43 AM

நீண்டகால குறட்டைத் தொல்லை: இலவச அறுவைச் சிகிச்சையால் நிரந்தரத் தீர்வு - சென்னை அரசு பொது மருத்துவமனை சாதனை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் வாலிபரின் குறட்டை விடும் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. இதனால் அவரது மனைவி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயவீரராஜன் (42). இவரது மனைவி மேனகா (38). ஜெயவீரராஜன் இரவில் குறட்டை விடுவதால் அந்த சத்தத்தில் தூங்க முடியாமல் அவரது மனைவி தவித்து வந்தார். இந்நிலையில் குறட்டை விடுவதை நிறுத்த சிகிச்சை பெறுவதற் காக ஜெயவீரராஜன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு வந்தார்.

காது, மூக்கு, தொண்டை துறை டாக்டர்கள் ஜெயவீரராஜனை சோதித்துப் பார்த்தபோது அவருக்கு தொண்டை அடைப்பு நோய் (உள் நாக்கு பகுதி) இருப்பது தெரியவந் தது. மேலும் உள்நாக்கு அதிகமாக வளர்ந்து, அதைச் சுற்றி சதைகள் அடைத்துக் கொண்டிருந்ததால் காற்று எளிதாக செல்ல முடியாமல் அவர் குறட்டை விடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காது, மூக்கு, தொண்டை துறை பேராசிரியர் டாக்டர் எம்.கே.ராஜசேகர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து, ஜெயவீரராஜனின் தொண்டையில் அதிகமாக வளர்ந் திருந்த உள்நாக்கு மற்றும் சதை களை அகற்றினர். இந்த அறுவைச் சிகிச்சை முடிந்து 3 மாத கண்காணிப் புக்கு பிறகு, ஜெயவீரராஜனின் குறட்டை விடும் பிரச்சினை சரியாகியுள்ளது.

இதே போல ஊரப்பாக்கத்தை சேர்ந்த மோகன் (56) என்பவருக்கு தொண்டை அடைப்பு நோய்க் கான அறுவைச் சிகிச்சை செய்யப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.விமலா, மருத்துவ துணை கண்காணிப்பாளர் நாராயண சாமி, டாக்டர் எம்.கே.ராஜசேகர் ஆகியோர் நிருபர்களிடம் கூறிய தாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே இந்த மருத்துவமனையில்தான் தொண்டை அடைப்பு நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்த அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும். கடந்த 3 மாதத்தில் 10 பேருக்கு தொண்டை அடைப்பு நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 மாதங்கள் கண்காணித்ததில் 5 பேருக்கு குறட்டை முற்றிலும் நின்றுவிட்டது.

மீதமுள்ள 5 பேரை கண்காணித்து வருகிறோம். தொண்டை அடைப்பு நோயை கண்டுகொள்ளாமல் விட்டால் காற்று செல்லாமல் நுரை யீரல் மற்றும் கல்லீரல் பாதிக்கப் படும். அதனால் குறட்டை பிரச்சினை இருப்பவர்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து இலவசமாக சிகிச்சைப் பெறலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜெயவீரராஜன் மனைவி மேனகா கூறும்போது, “இரவு நேரத்தில் தூங் கும்போது என் கணவரின் குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். எங்களால் தூங்கவே முடியாது. தற்போது டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்து எனது கணவரின் பிரச்சினையை சரிசெய்துவிட்டனர். இனி நாங்கள் இரவில் நிம்மதியாக தூங்கலாம் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x