Published : 11 Apr 2015 01:12 PM
Last Updated : 11 Apr 2015 04:59 PM
ஆந்திராவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 20 பேரின் வாரிசுகளின் கல்விச்செலவை பாமக ஏற்கும் என்று பாமக இளைஞர் அணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து போளூரில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
''ஆந்திராவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 20 பேரின் வாரிசுகளின் கல்விச்செலவை பாமக ஏற்கும். வாரிசுகள் உயர் கல்வி வரை படிக்கும் செலவை ஏற்கிறோம்.
20 பேரின் குடும்பங்களுக்கும் 25 லட்சம் பணம், வீடு, வேலைவாய்ப்பு தர தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.