Published : 13 Apr 2015 11:58 AM
Last Updated : 13 Apr 2015 11:58 AM

போலி சான்றிதழ்கள் விவகாரம்: பாமகவில் இருந்து சண்முகசுந்தரி நீக்கம்

பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் கைதான சண்முகசுந்தரி பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்ததாக சண்முகசுந்தரி, அருண்குமார், கணேஷ் பிரபு என மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சண்முகசுந்தரி பாமக மகளிர் அணி துணைத் தலைவி எனக் கூறப்பட்டது. விரிவான செய்திக்கு: | >போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: பாமக மகளிர் அணி துணை தலைவி உட்பட 3 பேர் கைது- மேலும் பலருக்கு வலை |

இந்நிலையில், சண்முகசுந்தரியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக பாமக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் மாநகரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரி என்பவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக் கொள்கைக்கு எதிராக, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

இவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. நீண்டகாலமாக கட்சி சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை.

இந்த நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ராமதாஸ், அன்புமணி ஒப்புதலுடன் இன்று முதல் நீக்கி வைக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடிக் கணக்கில் சம்பாத்தியம்:

சண்முகசுந்தரி, கணேஷ் பிரபு, அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து பலருக்கு போலியான சான்றிதழ் களை தயார் செய்து கொடுத்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர். சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x