Published : 09 Apr 2015 12:18 PM
Last Updated : 09 Apr 2015 12:18 PM
'ஓ காதல் கண்மணி' படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், 'யு/ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். ஏப்ரல் 17ம் தேதி படம் வெளியாகிறது
மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'ஓ காதல் கண்மணி'. துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
படத்தின் பணிகள் முழுமையாக முடிந்தவுடன், இப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. 'யு/ஏ' சான்றிதழ் அளித்தார்கள். ஆனால், 'யு/ஏ' சான்றிதழ் என்றால் படத்துக்கு வரிச்சலுகை கிடைக்காது என்பதால் மறுதணிக்கைக் குழுவுக்கு அனுப்பினார்கள்.
'ஓ காதல் கண்மணி' படத்தைப் பார்த்த மறுதணிக்கைக் குழு அதிகாரிகளும் 'யு/ஏ' சான்றிதழ் அளித்தார்கள். இதனால் 'யு/ஏ' சான்றிதழுடன் இப்படம் வெளியாக இருக்கிறது. தற்போது சென்சார் பணிகள் முடிந்துள்ளதைத் தொடர்ந்து ஏப்ரல் 17ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.