Published : 26 Mar 2015 09:26 AM
Last Updated : 26 Mar 2015 09:26 AM

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உயர்த்த முடிவு: காத்திருப்பு போராட்டம் நிறைவு

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்துவதாக சமூகநலத் துறை அமைச்சர் உறுதி அளித்ததையடுத்து 2 நாள் காத்திருப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.

மாற்றுத் திறனாளிகள் சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 2 நாட்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, செயலாளர் எஸ்.நம்புராஜன் உள்ளிட்டோருடன் சமூகநலத் துறை அமைச்சர் பா.வளர்மதி, மாற்றுத் திறனாளி நலத்துறை செயலாளர் சிவசங்கரன், மாநில ஆணையர் டாக்டர் மணிவாசன் ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் கடும் ஊனமுற்றோருக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகையாக ரூ.1,500 ஏப்ரல் மாதம் முதல் நிலுவை தொகையுடன் வழங்கப்படும் என தெரிவித்தார். நிறுத்தப்பட்ட உதவித் தொகையை வழங்கவும், அடையாளச் சான்றை ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே பெறுவதற்கும், உதவித் தொகையை துறை மூலமே வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x