Published : 20 May 2014 09:17 AM
Last Updated : 20 May 2014 09:17 AM

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 27 வரை காலநீட்டிப்பு: ‘தி இந்து’ செய்தி எதிரொலி

பொறியியல் படிப்புக்கு விண்ணப் பிக்க மே 27-ம் தேதி வரை காலநீட்டிப்பு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக, முதல்வர் ஜெயலலிதா வுக்கும், அண்ணா பல்கலைக் கழகத்துக்கும் மாணவ-மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்ப படிவத்துடன் சாதி சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி என்றால் அதற்கான சான்றிதழ், இருப்பிடச்சான்று உள்பட பல்வேறு சான்றிதழ்களை இணைக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்க ளுக்கு டியூசன் கட்டணச் சலுகை (ரூ.20 ஆயிரம் வரை) அளிக்கப் படுகிறது.

மக்களவைத் தேர்தல் காரண மாக வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்தல் வேலையில் மும்முரமாக இருந்ததால், ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகளால் தேவை யான சான்றிதழ்களை பெற இயலவில்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி மே 20-ம் தேதி என்பதால், சான்றிதழ் வாங்க முடியாத காரணத்தினால், எங்கே பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் போய்விடுமோ? என்று மாணவ-மாணவிகள் கலக்கம் அடைந்தனர். இது தொடர்பாக ‘தி இந்து’வில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி தேதி என்று அறிவிக்கப் பட்ட நிலையில், திங்கள்கிழமை காலை ஆயிரக் கணக்கான மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கவும், பூர்த்தி செய்த விண்ணப் பங்களை பெற்றுக் கொள்ளவும் கடைசி தேதி மே 27-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரம் காலஅவகாசம்

இதுதொடர்பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரிய ராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக் இடங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் சேருவதற் கான விண்ணப்பங்கள் வழங்குவ தற்கான கடைசி தேதி மே 27-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தினமும் (ஞாயிறு, பொது விடுமுறை நாட்கள் நீங்கலாக) காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 27-ம் தேதி மாலை 6 மணி சமர்ப்பிக்கலாம். இவ்வாறு பேராசிரியர் ரைமன்ட் உத்தரியராஜ் கூறியுள்ளார்.

சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 2 ஆயிரத்து 806 விண்ணப்பங்கள் விற்பனை யாகியுள்ளன. ஆனால், விண்ணப்ப விற்பனையுடன், பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் மிகக் குறைவாக உள்ளது. விண்ணப்பங் கள் வாங்கிய ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகளால் தேவை யான சான்றிதழ்கள் பெற முடியவில்லை. இதனால், அவர்கள் விண்ணப்பிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அரசு ஒரு வாரம் காலஅவகாசம் அளித்திருப்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விண்ணப்ப விற்பனை அதிகரிக்குமா?

கடந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருந்தன. இந்த ஆண்டு விண்ணப்ப விற்பனை 2 லட்சத்து 10 ஆயிரம் என்ற அளவில் இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எதிர்பார்க்கிறது. விண்ணப்பங்கள் வாங்கிய எல்லா மாணவர்களும் அவற்றை சமர்ப்பித்து விடுவதில்லை. சென்ற முறை 2.35 லட்சம் விண்ணப் பங்கள் விற்றுத் தீர்ந்தாலும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங் கள் 1.9 லட்சம்தான். அதிலும் கலந்தாய்வில் கலந்துகொண்டவர் கள் 1.8 லட்சம் பேர் மட்டுமே. கடந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பவில்லை. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர், அண்ணா பல்கலை.க்கு நன்றி

தேவையான சான்றிதழ்களை தாலுகா அலுவலகங்களில் வாங்குவ தற்கு காலஅவகாசம் கிடைத்த மகிழ்ச்சியில் மாணவ-மாணவிகள் கூறியதாவது: முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் சமர்ப்பித்தால்தான் அதற்கான கல்விக் கட்டணச் சலுகை கிடைக்கும். இதற்கு கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகிய 3 அதிகாரிகளும் சான்றளிக்க வேண்டும். வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்ததால் அவர்களிடம் கையெழுத்து பெற்று சான்றிதழ்கள் பெறவில்லை. தற்போது, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 27-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்திருப்பதால் எங்களால் ஒரு வாரத்திற்குள் சான்றிதழ்களை வாங்கி விண்ணப்பித்து அரசு சலுகையைப் பெற்றுவிட முடியும். காலநீட்டிப்பு வழங்கியதற்காக முதல்வருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் நன்றி. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x