Published : 08 Mar 2015 10:10 AM
Last Updated : 08 Mar 2015 10:10 AM

அதிமுக, திமுகவுடன் இனி கூட்டணி இல்லை: அன்புமணி ராமதாஸ் பேட்டி

அதிமுக, திமுகவுடன் இனி கூட்டணி வைக்கமாட்டோம் என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.

கட்சியின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் நேற்று பங்கேற்ற அவர் செய்தியாளர் களிடம் கூறியது: 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் மது, ஊழல் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் முன்வைப்போம். முதல் வர் பதவியில் பாமக என்ன செய் யும் என்பது குறித்து பல்வேறு திட்டங்கள் உள்ளன. பாமக ஆட் சிக்கு வந்ததும், பூரண மதுவிலக்கில் முதல் கையெழுத்திடுவோம். கல்வி, வேளாண்மை, சுகாதாரம், வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்போம். தேவையற்ற இலவசங்களைத் தவிர்ப்போம்.

‘கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தம். இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்கள் சுடப்பட்டால் எங்கள் சட்டம் ஏற்றுக்கொள்ளும்’ என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதை, இந்திய அரசு வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவது உள்ளிட்ட பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர, பாமக தொடர்ந்து போராடி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் நிர்வாகமே இல்லை. ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுபட அமைச்சர்கள் கோயிலில்தான் இருக்கிறார்கள். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதிமுக, திமுகவுடன் இனி கூட்டணி வைக்கமாட்டோம். 50 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x