Last Updated : 02 May, 2014 09:13 AM

 

Published : 02 May 2014 09:13 AM
Last Updated : 02 May 2014 09:13 AM

ஸ்வாதி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு: மணக்கோலத்தில் காண வேண்டிய மகளை பறிகொடுத்தோமே என கதறல்

சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான ஸ்வாதியின் உடல் வியாழக் கிழமை இரவு அவரது பெற் றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி ஸ்வாதி என்னும் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஸ்வாதி பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் பெங்க ளூருவில் உள்ள பிரபல சாப்ட் வேர் கம்பெனி ஒன்றில் பணி புரிந்து வந்தார். அவரது உடலைப் பெறுவதற்காக, வியாழக் கிழமை மாலையில் தந்தை ராமகிருஷ்ணனும், தாயார் காமாட்சி தேவியும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவமனை பிண வறையில் வைக்கப்பட்டிருந்த ஸ்வாதியின் உடலை பார்த்து அவர்கள் கதறியழுதனர். இதைக் கண்ட பொதுமக்களும் கண்கலங்கினார்கள். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஸ்வாதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மணக்கோலம் காண சில தினங்களே இருந்த நிலையில் மகள் இறந்ததை எண்ணி அவரது பெற்றோர் துக்கத்தில் கதறி அழுதனர். பின்னர், ஸ்வாதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திர மாநிலம் குண்டூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பாட்டிக்குப் பரிசு

பொறியியல் பட்டப் படிப்பு முடித்ததுமே வேலை கிடைத்த தால் ஸ்வாதி, திருவனந்தபுரத்தில் 3 மாதப் பயிற்சி முடிந்து, பெங் களூரில் கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்தார். முதல் மாத ஊதியத் தில் தனது பாட்டிக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொண்டு திருமணக் கனவுகளுடன் புறப் பட்ட ஸ்வாதியின் முடிவு அவரது குடும்பத்தினருக்கு ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x