Published : 25 Mar 2015 09:38 AM
Last Updated : 25 Mar 2015 09:38 AM

ஐடி சட்டம் 66ஏ பிரிவு செல்லாது: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சிதம்பரம், ஸ்டாலின் வரவேற்பு

சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்வது தொடர்பான ஐடி சட்டம் 66ஏ பிரிவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பை பல்வேறு தலைவர்களும், வழக்கறிஞ ர்களும் வரவேற்றுள்ளனர்.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்):

தகவல் தொழில்நுட்ப சட்டம் 66ஏ செல்லாது என்றும், அது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற் கிறேன். இந்த சட்டப்பிரிவு மிக மோசமான முறையில் வரை யறுக்கப்பட்டது. இது மிகவும் பாதிப்பை தரக்கூடியது. இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது தவறாகவும் பயன்படுத்தப்பட்டது.

இணையத்தில் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன் படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. அதற்கு ஏனைய சட்டங் களை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாமே ஒழிய, ஐடி சட்டம் 66ஏ அதற் கான சரியான பதிலாக இருக் காது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் (திமுக பொருளாளர்):

தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 66ஏ-வை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இந்திய ஜனநாயகத்தின் வரலாற்று சிறப்புமிக்க நாளாகும்.

சமூக வலைத்தளங்கள் தவறான முறையில் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் இந்த பிரிவு கொண்டு வரப்பட்டாலும் காவல்துறையும், அரசுகளும் இதை தவறாகவே பயன்படுத்தி வந்தன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புடன் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும், கண்ணி யமான மாற்று கருத்துகளை விமர்சனங்களாக ஏற்றுக்கொள் ளவும் பெரும் வாய்ப்பாக அமையும். மேலும் சமூக வலைத்தளத்தை கவனமுடன் பயன்படுத்துமாறு வேண்டு கோள் விடுக்கிறேன்.

கே.எம்.விஜயன் (மூத்த வழக்கறிஞர்):

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66ஏ அரசியமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே.

பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களில் ஒருவருக்கு எதிராக அவதூறான கருத்துகள் இடம்பெற்றால், அதனால் பாதிக்கப்பட்டவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம். இந்திய தண் டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 200-ன்படி அவர் மான நஷ்ட வழக்கு தொடரலாம். அவரது மனுவை நீதிமன்றம் விசாரித்து, மனுவில் கூறப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மட்டும், அவதூறான கருத்தை பரப்பிய வர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார். புகார் கட்டத்தில் அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் கூறி யாரையும் கைது செய்ய முடியாது.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ-ன்படி இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்தை பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டப் பிரிவு, இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் பிரிவு 19 (1)(a)-க்கு முரணாக உள்ளது. ஆகவே, 66ஏ பிரிவை நீக்கிய உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கை சரியானதே.

இப்போதும்கூட இணையதளங்களிலோ அல்லது பிற சமூக வலை தளங்களிலோ ஒருவருக்கு எதிராக அவதூறான கருத்து களை யாரேனும் பரப்பினால், அதனால் பாதிக்கப்பட்டவர் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 499-ன் கீழ் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேட எவ்வித தடையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் சேதுராமன் (அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர்):

மிகப்பெரிய ஊழல்கள் குறித்த ஆதாரங்கள் கூட அண்மைக்காலத்தில் இணையதளங்களில்தான் முதலில் வெளிவந்தன. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நவீன யுகத்தின் மைல் கல் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x