Published : 19 Mar 2015 10:26 AM
Last Updated : 19 Mar 2015 10:26 AM

அனைத்து கோயில்களிலும் எச்சரிக்கை மணி, கண்காணிப்பு கேமரா: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கோயில்களிலும் எச்சரிக்கை மணி, கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் உத்தரவிட்டார்.

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அத்துறையின் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் சென்னையில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில், அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ஆர்.கண்ணன், ஆணையர் மா.வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் (விசாரணை) என்.திருமகள், கூடுதல் ஆணையர் (திருப்பணி) எம்.கவிதா மற்றும் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள், பொறியியல் பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் காமராஜ் பேசும்போது, “பாதுகாப்புக்காக அனைத்து கோயில்களிலும் களவு எச்சரிக்கை மணி, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சிதிலமடைந்த கோயில்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதுதான் துறையின் தலையாய நோக்கம்.

எனவே, கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x