Published : 08 Mar 2015 10:45 AM
Last Updated : 08 Mar 2015 10:45 AM

தமிழக மீனவர்களை சுடுவதில் தவறில்லை என்பதா? - இலங்கை பிரதமருக்கு மீனவர் அமைப்பு கண்டனம்

இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறும் தமிழக மீனவர்களை சுடுவதில் தவறில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருப்பதற்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர்.

அண்மையில் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு ரணில் விக்ரமசிங்கே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப் பதாவது: இந்திய மீனவர்கள் கோருவது போல், இலங்கையின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் ஆழ்கடல் மீன் பிடிக்க அனுமதி அளிக்க முடியாது.

இந்திய மீனவர்கள் 600-க்கும் மேற்பட் டோரை இலங்கைக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 2011-க்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கு இந்திய மீனவர் கள் சிலர் ஆயுதங்களை வழங்கி வந் தனர். அவ்வாறு ஆயுதங்கள் வழங்க இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் மீனவர்களே சுடப்பட்டுள்ளனர். 2011-க்குப் பிறகு எவ்வித துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறாமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடந்திருக்காது. இந்திய கடல் எல்லைக் குள்ளேயே அவர்கள் இருந் திருந்தால் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடந்திருக்காது. எங்கள் எல்லைக்குள் நடக்கும் துப்பாக்கிச் சூடு தவறில்லை என கூறியிருந்தார். அவரது கருத்து தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ராமேசுவரம் மீனவர் நேசக்கரங்கள் அமைப்பின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறிய தாவது:

இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் வந்து மீன் பிடிப்பதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிப்பதும் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரக்கூடியது.

குறிப்பாக இந்தியாவின் ஆழ்கடல் பகுதியான “வெட்ஜ் பாங்க்” பகுதியில் உலக அளவில் அதிக வருவாய் தரக்கூடிய சூரை மீன்களை சிங்கள மீனவர்கள் அள்ளிச் செல்கிறார்கள். இவ்வாறு எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்களுக்கு சிறுகாயத்தை கூட இந்திய கடற்படையி னர் ஏற்படுத்தியதாக வரலாறு கிடை யாது.

2011-க்கு பிறகு தமிழக மீனவர்கள் மீது எந்த துப்பாக்கிச்சூடும் நடைபெற வில்லை என ரணில் கூறியுள்ளார். ஆனால், 2.4.2011 அன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோற்றது. இதனால் ஆத்திரமடைந்த இலங்கைக் கடற்படையினர், அன்றிரவு நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேரை கொன்றனர்.

இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை களை இந்திய, இலங்கை மற்றும் தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் லாபத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருவது துரதிருஷ்டவசமானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x