Published : 09 Mar 2015 09:48 AM
Last Updated : 09 Mar 2015 09:48 AM

புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குநர்களான டாக்டர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் தெரிவித்தனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாமும் மருத்துவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. இதில் ஆகாஷ் மருத்துவமனை இயக்குநர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ், காது, மூக்கு, தொண்டை நிபுணர் அருணைதீபன், வலிநிவாரண சிகிச்சை நிபுணர் ஜி.கே.குமார் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

டாக்டர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் அளித்த பதில்கள் வருமாறு:

தமிழகத்தில் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயும், மார்பக புற்றுநோயும் அதிகரித்து வருகிறது. பொதுவாக 16 வய துக்கு மேல் உள்ள பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனையை ஆண்டுக்கு ஒருமுறை செய்து கொள்ள வேண் டும். இல்லை என்றால், திருமணத் துக்கு பிறகாவது ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குழந்தையில்லா தம்பதியரில் யாராவது ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட் டால், அவர்கள் சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பாக கரு முட்டை மற்றும் விந்தணுவை பரி சோதனை கூடத்தில் வைத்து பாது காக்க முடியும். புற்றுநோய் பாதிப்பி லிருந்து முழுவதுமாக மீண்ட பிறகு பாதுகாக்கப்பட்ட விந்தணு அல்லது கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்காது.

பெண்கள் தங்களது மார்பகங் களில் வித்தியாசம் காணப்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நண்பர்களிடமும் உறவினர்களிட மும் ஆலோசனை கேட்கக் கூடாது. தகுதியான டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர் களில் 50 சதவீதம் பேர், நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்ப தில்லை. கட்டுப்பாடு இல்லாத சர்க் கரை நோய், பல்வேறு தொந்தரவு களை கொடுக்கும். இந்த பாதிப்பி லிருந்து மீள்வதற்கு மிக தீவிரமான சிகிச்சை. உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு அவசியம்.

இவ்வாறு அவர்கள் பதில் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x