Published : 19 Mar 2015 10:37 AM
Last Updated : 19 Mar 2015 10:37 AM

சிறுபான்மை விரோத நடவடிக்கைகள் பாஜக ஆட்சியில் அதிகரிப்பு: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

பாஜக ஆட்சிக்கு வந்த பின்புதான் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்திய ஜனநாயகத்தில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் வேற்றுமை யில் ஒற்றுமையாகும். பெரும் பான்மை மக்களும், சிறுபான்மை மக்களும் ஒருங்கிணைந்து நம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றனர். அதனால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பும், நல்வழிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

ஆனால், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே டெல்லியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. குறிப்பாக, கிறிஸ்தவ தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. சிறுபான்மை இன மக்கள் அச்சுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் 71 வயது கன்னியாஸ் திரியை ஒரு வன்முறைக் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதேபோல், ஹரியாணா மாநிலத் தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கிறிஸ்தவ தேவாலயம் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்புதான் இத்தகைய சிறுபான்மை விரோத நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

எனவே, சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக ஈடுபட்ட வன்முறைக் கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு வாசன் தெரிவித்து உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x