Published : 09 Mar 2015 09:22 AM
Last Updated : 09 Mar 2015 09:22 AM

தனியார் டி.வி. அலுவலகம் முன்பு இந்து அமைப்புகள் முற்றுகை போராட்டம்: கேமரா உடைப்பு; தலைவர்கள் கண்டனம்

சென்னையில் தனியார் டி.வி. அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் ஒரு வீடியோ கேமரா உடைக்கப்பட்டது.

சென்னை ஈக்காட்டுதாங்கலில் புதிய தலைமுறை டி.வி.சேனலின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த சேனலில், மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி ‘பெண்களுக்கு தாலி தேவையா? இல்லையா?’ என்ற தலைப்பில் சிறப்பு விவாதம் ஒளிபரப்புவதாக அறி விக்கப்பட்டிருந்தது. இதற்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. நிகழ்ச்சியை தடை செய்யும்படி வலியுறுத்தின.

இந்நிலையில் மகளிர் தின மான நேற்று காலை டி.வி. அலுவலகம் முன்பு பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூடி, நிகழ்ச்சியை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

அப்போது, அந்த டி.வி. சேனலில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர் செந்தில்குமரன், போராட்டத்தை வீடியோவில் பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த போராட் டக்காரர்கள், அவரது கேமராவை பறித்து தரையில் வீசி உடைத்தனர். அவரையும் தாக்கினர். அப்போது அங்கே வந்த பெண் நிருபர் ஒருவரையும் போராட்டக்காரர்கள் தாக்க முயன்றனர்.

அதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார், போராட்டக் காரர்கள் 10 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டத்தையடுத்து, குறிப்பிட்ட சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

தலைவர்கள் கண்டனம்

டி.வி. அலுவலகத்தில் நடந்த தாக்குதலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:

கலாச்சார காவலர்களாக தங்களை நினைத்துக் கொள்ளும் இந்துத்வா அமைப்புகளின் நடவடிக்கை கள் கண்டனத்துக்குரியது. கருத் துரிமை, பத்திரிகை சுதந்திரத்தின் மீதான இத்தகைய தாக்குதல்கள் ஜனநாயகத்தின் மீது தொடுக் கப்படும் தாக்குதலாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:

வன் முறையால் கருத்துகளை முடக்க நினைத்தவர்கள் தோற்றதுதான் வரலாறு. பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக பின்தள்ளும் இந்துத்வா சக்திகள், மகளிர் தினத்தன்று பெண் செய்தியா ளரை தாக்க முயன்று மீண்டும் தங்களை நிரூபித்துக் கொண்டுள் ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்:

அரசியல் தளத்தில் செல்வாக்கு இல்லாத மதவெறி சக்திகள், பண்பாட்டுத் தளத்தில் வன்முறையை ஏவி, தமது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சி செய்கின்றன. இதற்கு ஜனநாயக அமைப்பில் இடமில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனநாயக முறைப்படி தொலைக் காட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்களை ஒரு கி.மீ. முன்பாகவே தடுத்து நிறுத்தி கைது செய்ய முற் பட்டபோது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் போலீஸார் தடி யடி நடத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில்தான் கேமரா கீழே விழுந்தது. இதை மறைத்து தவறான செய்திகள் வெளிவருகின்றன’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x