Published : 03 Mar 2015 08:55 AM
Last Updated : 03 Mar 2015 08:55 AM

வைகை எக்ஸ்பிரஸ் ரயில்: இன்று 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் - சிக்னல் அமைக்கும் பணி நடக்கிறது

செங்கல்பட்டு - விழுப்புரம் மார்க்கத்தில் புதிய இரட்டை வழிப்பாதை அமைக்கப்பட் டுள்ளது. இந்த மார்க்கத்தில் திண்டிவனம் - தொழுப்பேடு இடையே சிக்னல் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இன்று நடைபெறுகிறது.

அதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம் செய்தும், ரத்து செய்தும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன் விவரம்:

சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635) சென்னை எழும்பூரில் இருந்து பகல் 1.20 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16854) திருச்சிராப்பள்ளியில் இருந்து 90 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

மேல்மருவத்தூர் - விழுப்புரம் - மேல்மருவத்தூர் பாசஞ்சர் ரயில் (66045 / 66046) ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி - புதுடெல்லி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22404) செங்கல்பட்டில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக் கப்படும்.

புனே - திருச்சிராப்பள்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டபின் செல்லும்.

சென்னை எழும்பூர் - புதுச்சேரி - சென்னை எழும்பூர் பாசஞ்சர் ரயில் (56037 / 56038) செங்கல்பட்டு - புதுச்சேரி இடையே ஏதாவது ஒரு இடம் வரை மட்டுமே செல்லும்.

சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர் - சென்னை கடற்கரை பாசஞ்சர் ரயில் (66043 / 66044) செங்கல்பட்டு - மேல்மருவத்தூர் இடையே ஏதாவது ஒரு இடம் வரை மட்டுமே இயக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x