Published : 11 Mar 2015 09:38 AM
Last Updated : 11 Mar 2015 09:38 AM

அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும், அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில், வரும் 16-ம் தேதி முதல் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், கிண்டி பகுதியில் சென்னை மண்டல பயிற்சி இணை இயக்கு நரகத்தின் கீழ் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில், பெங்களூரைச் சேர்ந்த ஃபிளிப்கார்ட் (Flip kart internet private limited, Bangalore) என்ற தனியார் நிறுவனத்தின், முழு நேர வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் வரும் 16-ம் தேதி முதல் 4 வாரங்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏற்கெனவே பணி அனுபவம் உள்ள 30 வயதுக்கு உட்பட்ட நபர்கள் பங்கேற்கலாம். மேலும், பயிற்சியில் கலந்து கொண்டு சான்றிதழ் பெறும் நபர்களுக்கு சென்னையில் ரூ.8 முதல் ரூ.9 ஆயிரம் வரையிலான ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

பணிக்கு தேர்தெடுக்கப்படும் நபர்கள் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு கிண்டி அரசின் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 044-22501530 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x