Published : 24 Mar 2015 08:38 AM
Last Updated : 24 Mar 2015 08:38 AM

வாளையாறு சோதனைச்சாவடி பிரச்சினை: ஏப்.1 முதல் கேரளத்துக்கு லாரிகள் இயக்கப்படாது - அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவிப்பு

வாளையாறு சோதனைச் சாவடி யை கடந்து செல்வதற்கு ஏற்படும் காலதாமதத்தை தடுக்க கேரள அரசு போதிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், பிரச்சினைக்குத் தீர்வு கோரியும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், அந்த மாநிலத்துக்கு லாரிகள் இயக்கப்படாது என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ், தமிழ்நாடு-கேரளா லாரி உரிமையாளர்கள் ஒருங் கிணைப்புக் குழு, கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கோவையில் நேற்று நடைபெற்றது

அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் அமைப்பின் தலைவர் பிம் வத்வா, அந்த அமைப்பின் டோல் கமிட்டித் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரளத்துக்குள் செல்வதற்கு லாரி பயணப் போக்குவரத்தைக் காட்டிலும், வாளையாறு சோதனைச் சாவடியில் காத்திருக்கும் நேரம் கூடுதலாக இருக்கிறது. குறைந்தது 10 மணி முதல் 20 மணி நேரம் வரையிலும் அனுமதிக்காக லாரிகள் காத்திருக்கின்றன.

இதனைக் கண்டித்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம். அப்போது, எங்களை அழைத்து, கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி பேச்சுவார்த்தை நடத்தினார். வாளையாறு சோதனைச்சாவடியில் காலதாமதத்தை தவிர்ப்பதற்காக தற்போதுள்ள 3 சேவை பூத்துகள், 10-ஆக விரிவுபடுத்தப்படும். வெளிப் படையாக சரக்குகளை கண்டறியும் வகையில் ஸ்கேன் மற்றும் கேமிராக்கள் பொருத்தி சோதனை துரிதமாக்கப்படும்.

இரும்பு, ஸ்டீல் மற்றும் காய்கறிகள் போன்ற சரக்குகளை எளிதாக சோதனை செய்ய கிரீன் சேனல் வசதி கொண்டு வரப்படும். சோதனைச் சாவடியில் லாரி தொழிலா ளர்களுக்காக கழிப்பிடம், குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படும் ஆகிய உறுதிகளை அளித்தார். இதனால், அப்போது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால், எந்த உறுதிமொழியும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. லாரிகள் செல்வதற்கு தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அந்த மாநில அரசுக்கு அண்மையில் நினைவூட்டி இருந்தோம். ஆனால், கோரிக்கை குறித்து எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை. இதனால், வேறுவழியின்றி வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், கேரளத்துக்கு லாரிகளை இயக்காமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவிக் கிறோம். பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.

ஒரு கோடி முட்டை

கேரளத்துக்கு வெளி மாநிலங் களில் இருந்து ஒரு நாளைக்கு 2 ஆயிரம் லாரிகள் இயக் கப்படுகின்றன. வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி முட்டை, 95 லட்சம் கிலோ கோழி இறைச்சி, 600 லோடு அரிசி, 400 லோடு பச்சைக் காய்கறிகள், மற்றும் மாட்டிறைச்சி செல்வது பாதிக்கப்படும். வேறு வழியில்லாமல் போராட்டத்தை நடத்துகிறோம். கேரள மக்களிடம் முன்கூட்டியே இதற்காக மன்னிப் பையும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x