Published : 05 Mar 2015 09:10 AM
Last Updated : 05 Mar 2015 09:10 AM

விடுதலைப் புலிகளுக்கு ரசாயன திரவம் கடத்திய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

மதுரை சக்கிமங்கலம் சமத்துவபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் கேன்களில் பதுக்கப் பட்டிருந்த வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன திரவத்தை கடந்த 8.4.2008-ல் போலீஸார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக இலங்கை அகதிகள் கண்ணன், எட்வர்டு ஜெயக்குமார், இலங்கை நாதன், நவநீதகிருஷ்ணன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ஜாமீனில் விடுதலையான கண் ணன், பின்னர் தலைமறைவாகி விட்டார்.

இந்த வழக்கு மதுரை 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன் றத்தில் நேற்று விசாரிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் என்.செல்வம் வாதிடும்போது, கல்லூரி ஆய் வகத்துக்கு தேவைப்படுவ தாக போலி அடையாள அட்டை யைக் காட்டி அந்த ரசாயன திர வத்தை பெங்களூரில் வாங்கி உள்ளனர். அவற்றை மதுரையி லிருந்து மண்டபம் அகதிகள் முகாமுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து இலங்கைக்கு கடத் தவும், விடுதலைப்புலிகளுக்கு வழங்கவும் திட்டமிட்டிருந்தனர். இந்த ரசாயன திரவம் வெடி பொருள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளாகும் என்றார்.

இதையடுத்து நவநீத கிருஷ் ணன், எட்வர்டு ஜெயக்குமார், இலங்கை நாதன் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி என்.வெங்கடவரதன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x