Published : 01 Mar 2015 02:54 PM
Last Updated : 01 Mar 2015 02:54 PM

புறம்போக்கு நில குவாரிகளுக்கு மின் இணைப்பு வழங்கியது எப்படி? - மின்வாரிய அதிகாரியிடம் சகாயம் விசாரணை

அரசு புறம்போக்கு நிலங்களில் செயல்பட்ட கிரானைட் குவாரி களுக்கு மின் இணைப்பு கொடுத்தது குறித்து மின்வாரிய அதிகாரி யிடம் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் விசாரணை மேற் கொண்டார்.

மதுரை மாவட்டத்தில் நடந் துள்ள கிரானைட் முறைகேடு குறித்து 8-ம் கட்ட விசாரணை நடத்தி வருகிறார் சகாயம். முறைகேடு குறித்து பல்வேறு தகவல்களை கேட்டு மத்திய, மாநில அரசின் பல்வேறு துறைகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். வருமான வரி, சுங்கம், தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் பதில்கள் அடங்கிய மனு அவரிடம் வழங்கப்பட்டது. அதில் ஏற்றுமதியான கிரானைட் கற்கள், வசூலிக்கப்பட்ட வரி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மதுரை கிழக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் வீரப்பன் நேற்று சகாயத்திடம் பதில் மனுவை அளித்தார்.

அவரிடம் சகாயம், நில உரிமை குறித்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் புறம்போக்கு நிலத்தில் செயல்பட்ட குவாரிகளுக்கும் மின் இணைப்பு எப்படி அளிக்கப்பட்டது என கேட்டார்.

பதில் மனுக்கள் இல்லை

நிலம் குறித்து கிராம நிர் வாக அலுவலர்கள் அளித்த சான்றிதழ்கள் அடிப்படையில்தான் மின் இணைப்பு அளிக் கப்பட்டுள்ளது என செயற் பொறியாளர் பதில் அளித்தார். மேலும் மின் இணைப்பின் வகை, கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து சகாயம் விசாரணை நடத்தினார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

காவல்துறை உள்ளிட்ட மேலும் சில துறைகளிலிருந்து நேற்றுவரை பதில் மனுக்கள் வரவில்லை என்றும், பல்வேறு துறையினர் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான அறிக்கை தயாரிப்பு பணி தீவிரமாக நடப்பதாகவும் விசாரணை குழுவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x