Published : 20 Mar 2015 09:17 AM
Last Updated : 20 Mar 2015 09:17 AM

3,586 கூட்டுறவு வங்கிப் பணியாளர் நியமனம்: அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

கூட்டுறவு வங்கிகளில் 3,586 பணி யாளர்களை நியமிப்பது தொடர் பான வேலைகள் ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்று அமைச் சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் காலி யாக இருந்த 3,586 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, கடந்த 2012 டிசம்பரில் நடத்தப் பட்டது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்தத் தேர்வில் 2.24 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், முதல்கட்டமாக 7,500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தேர்வு முடிவுகள் உடனடியாக வெப் சைட்டில் வெளியிடப்பட்டன.

இதையடுத்து, 2013 ஜனவரியில் நேர்முகத் தேர்வு தொடங்கியது. ஆனால், புயல் வெள்ளத்தைக் காரணம் காட்டி பாதியிலேயே அதை ஒத்தி வைத்தனர். அதன்பிறகு பணியாளர் நியமனத்துக்கு விடிவு பிறக்கவில்லை. இதனால், தேர் வானவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர்.

இது குறித்து அனைத்திந்திய கூட்டுறவு வங்கிப் பணியாளர் சம் மேளனத்தின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் சுமார் 5 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. 10 பேர் செய்யவேண்டிய வேலையை 2 பேர் செய்துகொண்டிருக்கிறார்கள். இதனால், வாடிக்கையாளர் சேவை யில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பினால் இப் போது கூட்டுறவு வங்கிகளில் 43 ஆயி ரம் கோடியாக உள்ள வைப்பு நிதியை இரு மடங்காக உயர்த்த முடியும்.

இதையெல்லாம் எடுத்துச் சொல்லி பல்வேறு போராட்டங் களை நடத்திவிட்டோம். அண்மை யில் கூட்டுறவுத் துறை அமைச்சரை சந்தித்தபோது, ‘இம் மாதம் 21-ம் தேதி பணி நியமன ஆணைகள் வந்து விடும்’ என்று தெரிவித்தார். பல முறை இப்படி அவர் சொல்லி இருந் தாலும் இந்த முறை உறுதியாக செய்துகொடுப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

எழுத்துத் தேர்வுக்கான அறிவிப் பில் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம் என்று தவறுதலாக அறிவித்துவிட்டனர். ஆனால், கூட்டுறவு சங்க துணை விதிகளில், கூட்டுறவு பட்டயப் படிப்பு முடித்தவர்களைத்தான் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று உள்ளது. இந்த ஷரத்தைச் சொல்லி, பட்டயப் படிப்பு படித் தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் பல்வேறு கட்டங் களைக் கடந்து 2 மாதங்களுக்கு முன்புதான் இறுதித் தீர்ப்பு வந்தது. ‘பட்டயப் படிப்பு முடித்தவர் களுக்கே பணி நியமனம் வழங்க வேண்டும், பட்டயப் படிப்பு முடிக் காதவர்கள் தேர்வாகி இருந்தால் அவர்களுக்கான பணியிடத்தை ரிசர்வ் செய்து வைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு வந்தால் அவர்களை அந்த இடத்தில் பணியமர்த்தலாம்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இப்போது பணி நியமனம் செய்வதற்கான வேலை களை தொடங்கி இருக்கிறோம். அநேகமாக அடுத்த வாரத்தில் தீர்வு எட்டப்பட்டுவிடும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x