Published : 10 Apr 2014 11:43 AM
Last Updated : 10 Apr 2014 11:43 AM

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிந்தது: விடுமுறை உற்சாகத்தில் மாணவ, மாணவிகள்

எஸ்எஸ்எல்சி தேர்வு கடந்த 26-ம் தேதி தொடங்கியது. கடைசி தேர்வான சமூக அறிவியல் பாடத்துடன் புதன்கிழமை தேர்வு முடிவடைந்தது.

தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள், அனைத்து தேர்வுகளும் முடிந்து விட்டதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். மாணவர்கள் நண்பர்களின் சட்டை மீது பேனா மையை தெளித்தும், வண்ணப் பொடிகள் தூவியும் குறும்பு சேட்டைகள் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விடுமுறையில் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மாணவ-மாணவிகளிடம் கேட்டபோது, “விடுமுறையை ஜாலியாக கழிப்போம்” என்று ஒரு சிலரும், “கம்ப்யூட்டர் பயிற்சி, இசைக்கருவி பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியில் சேருவோம்” என்று மற்றொரு சாராரும் கூறினர்.

கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வில் காப்பி அடித்த 6 மாணவர்கள் பறக்கும் படையினரிடம் சிக்கினர். 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி தேர்வின் முடிவு மே 23-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வு முடிவடைவதற்கு முன்பே தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. விடைத்தாள் மதிப்பீடு வியாழக்கிழமை (இன்று) தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x