Published : 05 Feb 2015 02:54 PM
Last Updated : 05 Feb 2015 02:54 PM

சட்டக் கல்லூரிக்கு கட்டாய விடுமுறை அளித்துள்ளது சரியான அணுகுமுறை அல்ல: வைகோ

சட்டக்கல்லூரிக் கட்டடத்தை இடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கல்லூரிக்கு விடுமுறை அறிவித்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல என வைகோ கூறியுள்ளார்.

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி தொடர்ந்து அதே இடத்தில் இயங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மாநகரத்திற்கு அழகூட்டும் கட்டடங்கள்தான் உயர்நீதிமன்றமும், அதனைச் சார்ந்து இருக்கின்ற டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியும்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு என்று கூறி, சட்டக் கல்லூரிக் கட்டடத்தை இடித்துத் தகர்க்க அரசு முடிவு செய்து இருப்பதாக அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைகிறேன்.

எக்காரணத்தை முன்னிட்டும் சட்டக்கல்லூரிக் கட்டடத்தை இடிக்கக் கூடாது. நியாயமான கோரிக்கைக்காக அறவழியில் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்துத் தடியடி நடத்திய காவல்துறையின் அடக்குமுறை கண்டனத்திற்கு உரியதாகும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் எங்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்றைய காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்தும், சட்டக்கல்லூரியை இட மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தியும் அறவழியில் போராடி வருகிறார்கள்.

ஆனால், சட்டக்கல்லூரிக் கட்டடத்தை இடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தற்பொழுது கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து இருப்பது சரியான அணுகுமுறை அல்ல. டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி தொடர்ந்து அதே இடத்தில் இயங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x