Published : 12 Feb 2015 10:10 AM
Last Updated : 12 Feb 2015 10:10 AM

தற்கொலை மையங்களாக மாறிவரும் அடையாறு, கோட்டூர்புரம் பாலங்கள்: தடுப்பு வேலிகள் அமைக்க கோரிக்கை

அடையாறு, கோட்டூர்புரம் ஆற்று பாலங்களில் இருந்து குதித்து தற்கொலை செய்பவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்று போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அடையாறு பாலத் தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆற்றுக்குள் குதித்த நபரின் உடலை நேற்று காலையில் தீயணைப்பு படையினர் மீட்ட னர். விசாரணையில் அவர் மந்தைவெளி அன்னை தெரசா நகரை சேர்ந்த ஆறுமுகம்(40) என்பது தெரிந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அடையாறு போலீஸார் தெரிவித் துள்ளனர். இவருக்கு சாந்தி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

அடையாறு பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து 2014-ம் ஆண்டில் 11 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 2 பேர் இறந்துள்ளனர். பாலத்தின் தடுப்பு சுவர் உயரம் குறைந்ததாக இருப் பதால் தற்கொலை செய்பவர் களுக்கு இங்கிருந்து குதிப்பது எளிதாக உள்ளது.

இதேபோல கோட்டூர்புரம் பாலத்தில் இருந்தும் ஆற்றுக்குள் குதித்து பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2012-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி பிரபல பாடகி நித்யயின் கணவர் மகாதேவன் கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து மென்பொருள் பொறியாளர் ரமேஷ் உட்பட 4 பேர் அந்த பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர்.

இப்படி சென்னையின் தற் கொலை மையங்களாக அடையாறு திரு.வி.க. மற்றும் கோட்டூர்புரம் பாலங்கள் உருவாகியுள்ளன. இதைத் தடுக்க இந்த இரு பாலங் களின் தடுப்பு சுவர்களின் உய ரத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது கம்பி வலைகள் மூலம் தடுப்பை ஏற்படுத்த வேண்டும் என்று போலீஸார் கோரிக்கை விடுத் துள்ளனர். பல கோடி ரூபாய் செல வில் அடையாறு திரு.வி.க. பாலம் புதுப்பிக்கப்பட்ட பின்ன ரும் தடுப்பு வேலிகள் அமைக்க வில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதி காரியிடம் கேட்டபோது, “ஆற்றின் மேல் கட்டப்படும் பாலம் இருக்க வேண்டிய விதிமுறைப்படிதான் இரு பாலங்களும் கட்டப்பட்டுள் ளன. பாலத்தில் தடுப்பு சுவர் வைத்து மறைத்தால் ஆற்றின் அழகை பார்க்க முடியாது என்று பலர் கூறுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்க ளிடம் ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும்” என்றார்.

டெல்லியில் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத் தில் கம்பியால் ஆன தடுப்பு வேலி கள் அமைக்கப்பட்டுள்ளன. இத னால் யாரும் பாலத்தின் கைப் பிடி சுவர் மீது ஏற முடியாது. ஆனால் பாலத்தில் நின்று ஆற்றின் அழகை யும் ரசிக்க முடியும். அதேபோல சென்னை பாலங்களிலும் அமைத் தால் நன்றாக இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x