Published : 17 Feb 2015 10:36 AM
Last Updated : 17 Feb 2015 10:36 AM
‘டெல்லி போலீஸ்’ தோற்று விக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதிய கட்சி மக்களின் தீர்ப்பை பெற்றுள்ளது.
டெல்லியில் புதிய அரசும் அமைந்துள்ளது. நகரின் முன் னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில், புதிய அரசுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.
விழாவில் பங்கேற்கும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்களை டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு நேற்று பணிகளைத் தொடங்கிய அமைச்சர்கள் எவரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.