Published : 24 Feb 2015 09:30 AM
Last Updated : 24 Feb 2015 09:30 AM
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் 9 பேர் கொண்ட பட்டி யலை அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து விடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஹெச்.எல்.தத்துவை நேற்று டெல்லியில் சந்தித்து மனு அளித்தது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பால் கனகராஜ் கூறும்போது, “அனைத்து சமுதாயத்தினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என கோரினோம். நியமனப் பெயர்களை ஒரே பட்டியலாக அனுப்பினால்தான் அனைவருக்கும் வாய்பளிக்கப்பட் டுள்ளதா என அறிய முடியும் என்பதால் 9 பேர் கொண்ட முதல் பட்டியலை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினோம்” என்றார்.
இந்த விவகாரத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவையும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சந்தித்து மனு அளித்தனர்.
பழைய முறையில் நியமனம்
நீதிபதிகள் நியமனத்துக்கு புதிய முறையை மத்திய அரசு அறிவித் துள்ளது. இதன்படி ஆறு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.
அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத் தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நீதிபதிகள், சட்டத்துறை அமைச்சர் ஆகியோருடன் இரு மேம்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த மேம்பட்டவர் களை தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுப்பர். இந்த இருவர் இன்னும் நியமிக்கப்படாததால், பழைய முறையிலேயே நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.