Published : 17 Feb 2015 03:32 PM
Last Updated : 18 Feb 2015 07:04 PM
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பயன்படுத்தும் ரகசிய விமானத்தின் படங்கள் முதல்முறையாக வெளியாகியுள்ளது.
வட கொரியாவின் மறைந்த முன்னாள் தலைவர் கிம்-இல் ஜாங்குடைய பிறந்தநாள் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. அந்நாட்டில் அரசு மிக முக்கிய தினமாக அனுசரிக்கப்படும் இந்த தினத்தில் வட கொரிய மக்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. மக்களுக்கு பல நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தினத்துக்கான ஏற்பாடுகளை தனது தனிப்பட்ட விமானத்தில் கிம் ஜோங் உன் ஆய்வு மேற்கொண்டப் படத்தை கொரிய மத்திய செய்தி மையம் வெளியிட்டுள்ளது.
'ஏர் ஃபோர்ஸ் உன்'-ல் அமர்ந்திருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் கட்டுமான பணியை பார்வையிடும்போது எடுக்கப்பட்டதாக அந்த செய்தி மையம் குறிப்பிட்டுள்ளது.
1963-ல் தயாரான உலகின் மிகப் பெரிய விமானமான சோவியத் இல்யூஷனை ஒப்பிட்டு தயாரிக்கப்பட்டது விமானம்தான் 'ஏர் ஃபோர்ஸ் உன்' என்றப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ரக விமானத்தின் தயாரிப்பு 1994 முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. சோவியத் யூனியனும் செக் குடியரசு மட்டும் இதனை தனி விமானமாகப் பயன்படுத்துகிறது.
சுமார் 200 பேரை சுமந்து செல்லக்கூடிய விமானமான இது அமெரிக்க அதிபர்கள் உபயோகப்படுத்தும் மேம்படுத்தப்பட்ட வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் கொண்ட அவற்றுக்கு இணையான விமான வகையாக கூறப்படுகிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் விமானப் பயன்பாடு அவரது தந்தை கிம் ஜோங் 2- வுக்கு முற்றிலும் மாறுப்பட்டதாக உள்ளது. கிம் ஜோங் 2 விமான பயணத்தில் மிகுந்த அச்சம் கொண்டவர். இந்தக் காரணத்தால் அவர் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கு பயணத்த சமயங்களில் பிரத்தியேக பாதுகாப்புக் கவசம் கொண்ட தனி ரயிலை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.