Published : 19 Feb 2015 09:30 AM
Last Updated : 19 Feb 2015 09:30 AM

சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்: விடிய விடிய பக்தர்கள் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1008 சிவாலயங்களிலும் திருவள்ளூர் மாவட்ட கோயில் களிலும் மகா சிவராத்திரி வெகு விமரிசையாக நேற்று நடை பெற்றது. அதிகாலை மலர் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1008 சிவாலயங்கள் அமைந்துள்ளன. காஞ்சி நகரில் அமைந்துள்ள ஏகாம் பரேஸ்வரர் கோயில், பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாக (மண் - ப்ருத்திவி) விளங்குகிறது. மகா சிவ ராத்திரி தினத்தையொட்டி நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் காலை முதலே சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. கைலாசநாதர், கச்சபேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சத்யநாத சுவாமி, திருக்கழுக்குன்றம் வேத கிரீஸ்வரர், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர், திருக்கச்சூர் மருந் தீஸ்வரர் ஆகிய கோயில்களில் இரவு முழுவதும் பல்வேறு சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

காஞ்சி நகரில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கைலாசநாதர், சத்யநாத சுவாமி கோயில்களில் மூலவருக்கு விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், நகரவாசிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டு இரவு முழுவதும் கோயிலில் தங்கி சுவாமியை வழிபட்டனர். அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்த பிறகு வீதியுலா நடைபெற்றது. காஞ்சி புரம் டி.எஸ்.பி.பாலச்சந்தர் தலை மையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட சிவன் கோயில்களிலும், நேற்று முன் தினம் இரவு தொடங்கி விடிய விடிய நான்கு கால பூஜை நடை பெற்றது.

திருவாலங்காடு வடாரண்யேஸ் வரர் கோயில், திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில், திருத்தணி வீரட்டீஸ்வரர் கோயில், நாபலூர் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது.

பால், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடை பெற்றது. தூப தீப ஆராதனை களும், தேவார இன்னிசை நிகழ்ச்சிகளும் நடந்தன. இவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x