Published : 05 Feb 2015 09:43 AM
Last Updated : 05 Feb 2015 09:43 AM

ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக கூறி திமுகவினர் காரை வழிமறித்து அதிமுக-வினர் தாக்குதல்: தேர்தல் அலுவலரை மாற்றக் கோரிக்கை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை யொட்டி வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக ராகவேந் திரபுரம் பகுதியில் 4 பேர், ஸ்ரீரங்கம் ரயில் நிலையச் சாலையில் ஒருவர் என்று திமுகவினர் 5 பேரை தேர் தல் பறக்கும் படையினர் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் செய்த தாகக் கூறி திமுகவினரைத் தாக்கி, வாகனத்தை அதிமுகவினர் உடைத்து சேதப்படுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

அதிமுகவினரின் கூறியதா லேயே திமுகவினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, பாரபட்சமாக நடந்து கொள்ளும், ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுகவினர் மனு அனுப்பினர். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி தொகுதி தேர்தல் பார்வையாளர் பால்கார் சிங்கிடமும் மனு அளித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக வழக்கறிஞர் எஸ். ஹரிஹரன் கூறும்போது, ‘தேர்தல் பணிக் காக திருவண்ணாமலை மாவட்டத் திலிருந்து வந்த திமுக தொண்டர் கள், ராகவேந்திரபுரம் பகுதி வழியாக காரில் சென்றபோது, அதிமுகவினர் அவர்களை வழிமறித்து தாக்கியதில் 2 பேர் காயமடைந்தனர். அதிமுகவினர் திட்டமிட்டு, பணத்தை தாங்களே கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரனிடம் அளித்து, திமுகவினர் மீது வழக்கு பதிய செய்துள்ளனர். இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அமைச்சர் காமராஜ், மாநகராட்சி கவுன்சிலர் தமிழரசி, மன்னார்குடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பெயர் தெரியாத 50-க்கும் அதிகமான அதிமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றார்.

கார் உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து ஸ்ரீரங்கம் முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன், மாநகரக் காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x