Published : 10 Feb 2015 09:39 AM
Last Updated : 10 Feb 2015 09:39 AM

வன்முறை புகார்கள் மீது நடவடிக்கை இல்லை: ஸ்ரீரங்கம் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் - இல.கணேசன் வேண்டுகோள்

போலி வாக்காளர்கள் குறித்தும், ஆளுங்கட்சியின் வன்முறை குறித்தும் தேர்தல் ஆணையத் திடம் புகார் அளித்து இது வரை நடவடிக்கை எடுக்காத தால் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றார் பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்.

பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியத்தை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

18 ஆண்டுகள் நடைபெற்ற ஒரு வழக்கின் மூலம் ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்ட நிலையில் கூட தமிழகத்தில் ஊழல் குறைந்த பாடில்லை. தற்போது ஸ்ரீரங்கத் தில் நடைபெறும் தேர்தலில் வெற்றிபெறுவதால் ஆட்சி மாறி விடப் போவதில்லை. ஆனாலும், ஆளுங்கட்சியின் ஊழலுக்கு எதிராக வாக்களிக்க கிடைத்த வாய்ப்பாக, கருத்துக் கணிப்புத் தேர்தலாகக் கருதி மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. இதற்குக் காரணம், போதையை ஒழிக்க வேண்டிய அரசே வீதி தோறும் மதுக் கடைகளை திறந்து வைத்துள்ளது தான். ஸ்ரீரங்கம் ஒரு முதலமைச் சருக்கான தொகுதி என்பதற் கான அறிகுறியே இல்லை. 45 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு இருந்ததோ, அதேநிலை தான் இன்றும் தொடர்கிறது. இத்தொகுதியின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தி ருக்கிறேன் என்றோ, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றியிருக்கிறேன் என்று கூறியோ ஆளுங்கட்சியி னரால் வாக்கு சேகரிக்க முடிய வில்லை. அதனால் வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகின்றனர்.

இங்கு தேர்தல் ஆணையத்தின் ஆணைகள் மீறப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள திருமண மண்டங்கள், சத்திரங்கள், விடுதி கள் அனைத்தும் ‘அம்மா’ மண்ட பமாக மாறிவிட்டன. நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் அமைதியாக உள்ளது. தேர்தல் ஆணையம் சீறும் பாம்பாக இருக்கிறதே தவிர, தீண்டும் பாம்பாக இல்லை. தேர்தல் விதிமீறல்களைக் கண் டித்து நடவடிக்கை எடுக்கக் கூடிய வர்கள் தாங்கள் என்பதை தேர்தல் பார்வையாளர்கள் மறந்து விடுகிறார்கள்.

தமிழகத்தில் தேசியக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். அப்போது தான் நதிநீர் இணைப்பு சாத்தியப் படும். காவிரி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். மகாநதியிலிருந்து வரும் நீர் கோதாவரி, கிருஷ்ணா நதிகள் மூலம் காவிரியில் பெருக்கெடுக்கும்.

ஆளுங்கட்சியின் வன்முறை, பணம் விநியோகம், போலி வாக் காளர்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள் ளோம். இவைகள் சரிசெய்யப் பட்டபின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, இடைத் தேர்தலை ஒத்திவைக்கவேண்டும். நாடாளுமன்றத் தேர்தலைப் போன்று, தேர்தலுக்கு முன் 144 தடை யுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் பாஜக அதனை எதிர்க்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x