Published : 04 Feb 2015 08:56 AM
Last Updated : 04 Feb 2015 08:56 AM

போயஸ் கார்டனில் அண்ணா படத்துக்கு ஜெ. அஞ்சலி: கருணாநிதி தலைமையில் திமுக அமைதிப் பேரணி

அண்ணாவின் 46-வது நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 46-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப் பட்டது. இதையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டில் அண்ணாவின் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக சார்பில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சி.பொன்னை யன், பி.எச்.பாண்டியன், விசாலாட்சி நெடுஞ்செழியன், செம்மலை, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., ஆதிராஜாராம் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி மரியாதை

சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதிப் பேரணி புறப்பட்டது.

இப்பேரணியில் பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தப் பேரணி சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் முடிவடைந்தது. அங்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், திமுக முதன் மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, தலைமைக்கழக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதிமுக அமைதிப் பேரணி

மதிமுக சார்பில் சென்னையில் நேற்று அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி சென்னை திருவல்லிக்கேணி டி 1 காவல் நிலையத்தில் தொடங்கி மெரினா கடற் கரையில் அண்ணா நினை விடத்தில் முடிவடைந்தது. இந்தப் பேரணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.

அண்ணா நினைவிடத்தில் பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ரெட்சன் அம்பிகாபதி, ஜீவன் உட்பட ஏராளமான மதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x