Published : 11 Feb 2015 09:01 AM
Last Updated : 11 Feb 2015 09:01 AM

2016 தேர்தலுக்கான முன்னோட்டமா ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்?

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் அடுத்த ஆண்டு (2016) நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டம் என்பதால் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயலலிதா 1,05,328 வாக்குகளும், திமுக வேட்பாளர் ஆனந்த் 63,480 வாக்குகளும் பெற்றனர். 41,848 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் குமார், திமுக வேட் பாளர் அன்பழகனைவிட 1,50,409 வாக்குகள் கூடுதலாக பெற்று 2-வது முறையாக வெற்றி பெற்றார்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் ப.குமாருக்கு 49,000 வாக்குகள் கூடுதலாக கிடைத்தது. குமாரின் வெற்றிக்கு ரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் கிடைத்த வாக்குகளே பேருதவியாக இருந்தது. 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை ஒப்பிடும்போது 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் குறைவுதான்.

ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு வராததால் அதிமுக வேட்பாளரை கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யும் முனைப்பில் அதிமுகவினர் அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு இட்ட பணியை ஒரு வேள்வியாகவே செய்து முடித்துள்ளனர்.

திமுகவும் முனைப்பு

2011, 2014 தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்த திமுக 2016-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட் டாயத்தில் இத் தேர்தலில் களமிறங் கியுள்ளது. அதிமுகவுக்கு போட்டி யாக தொகுதி முழுவதும் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் என பெரும்படை களத்தில் இறங்கியுள்ளது. மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கிராமங்களில் பாஜக சுணக்கம்

ஸ்ரீரங்கம் நகரப் பகுதியை மட் டுமே குறிவைத்து சுற்றிச்சுற்றி வரும் பாஜக தலைவர்கள், கிராமங்களில் கவனம் செலுத்தவில்லை. விஜய் காந்த் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வராததும் பாஜக தேர்தல் பணியில் சற்று தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x