Published : 13 Feb 2015 10:32 AM
Last Updated : 13 Feb 2015 10:32 AM

சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது ஆதாரத்துடன் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகப்பட்டினத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:

‘மிஸ்டு கால்’ கொடுத்து தமிழக பாஜகவில் இதுவரை 16 லட்சம் பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். 60 லட்சம் பேரை உறுப்பினராக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் தீவிர முயற்சியால் இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தற்போது அவர்களின் படகுகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டுள்ளன.

விரைவில் இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து எடுத்துச் சொல்லி, தீர்வு காண முயற்சிப்பேன். இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் விரும் பினால் இலங்கைக்குச் செல்ல லாம் அல்லது இந்தியாவிலேயே வாழலாம்.

சென்னை, தூத்துக்குடி துறை முகங்கள்போல குளச்சல் துறை முகத்தையும் மத்திய அரசின்கீழ் கொண்டுவந்து வளர்ச்சியடைய வழிசெய்யப்படும். தஞ்சை- நாகை நான்குவழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஸ்ரீரங்கத்தில் பாஜக அதிகமான ஓட்டுக்களைப் பெறும். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சிலர் போராடுவது உண்மையில் இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வதற்காக அல்ல. தங்கள் அமைப்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி விரைவில் பாஜகவும் போராட்டங்களில் இறங்கும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x