Published : 05 Feb 2015 09:30 AM
Last Updated : 05 Feb 2015 09:30 AM

தேனி மாவட்டத்தில் 440 மகளிர்நல சங்கங்களின் அங்கீகாரம் ரத்து

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் செயல்பட்ட 440 மகளிர் நலச்சங்கங்கள் உள்பட 449 சங்கங் களின் பெயர்கள் பதிவேடுகளி லிருந்து நீக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொதுப் பணிகளுக்காக தொடங்கப்படும் சங்கங்கள் அனைத்தும், தமிழ்நாடு சங்கப் பதிவுகள் சட்டத்தின் படி, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதுபோன்று பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் தங்கள் சங்க செயல் பாடுகளை, தமிழ்நாடு சங்கப் பதிவு கள் சட்டப்படி மேற்கொள்ள வேண் டும். சங்கங்களின் கணக்கு விவரங் களை உரிய நேரத்தில் பதிவாளர் அலுவலக அதிகாரிகளிடம் குறிப் பிட்ட கால இடைவெளியில் சமர்ப் பிக்க வேண்டும். அவ்வாறு கணக் குக் காட்டாத அல்லது விதிகளை மீறும் சங்கங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டு, அவற்றின் பெயர் பதிவேடுகளிலிருந்து நீக்கப்படும்.

இந்த அடிப்படையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா மற்றும் பெரியகுளம் தாலுகாவில் செயல்பட்டு வந்த சுமார் 449 சங்கங்களின் பதிவுகளை, மாவட்டப் பதிவாளர் அலுவலகம் திடீரென ரத்து செய்துள்ளது. இவற்றில் 440 சங்கங்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா மகளிர் நலச்சங்கங்கள் ஆகும்.

இதுகுறித்து பெரியகுளம் மாவட்டப் பதிவாளர் அலுவலக பதிவாளர் பிறப்பித்த உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட் டுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு மேல், சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆண்டறிக்கைகளை சமர்ப்பிக்காத சங்கங்களுக்கு விளக்கம் கேட்டு, கடந்த செப்டம்பரில் கடிதம் அனுப்பப்பட்டது. இதன்பிறகு 3 மாதங்கள் தாண்டியும் இந்த சங்கங்கள் ஆண்டறிக்கை களையோ, விளக்கமோ தாக்கல் செய்யவில்லை. எனவே, அந்த சங்கங்களை செயல்படாத சங்கங் களாகக் கருதி சங்கப் பெயர் பதிவேட்டிலிருந்து நீக்கம் செய் யப்படுகிறது என்று கூறப்பட் டுள்ளது.

இந்தப் பட்டியலில், இதய தெய்வம் புரட்சித் தலைவி டாக்டர் அம்மா மகளிர் நலச்சங்கம் என்ற பெயரில் 440 இடங்களில், தனித்தனியாக பதிவு செய்யப் பட்ட சங்கங்கள் இடம் பெற்றுள் ளன.

இந்த சங்கங்கள் பெரும் பாலும் 2003-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டவையாகவும், போடி நாயக்கனூர் தாலுகா, தேனி தாலுகா, ஆண்டிப்பட்டி தாலுகா வுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டவையாகவும் உள்ளன.

அதிமுக பொருளாளரும், தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் அம்மா பெயரிலான சங்கங்களின் பெயர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிமுகவின ரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

அம்மா பெயரிலான சங்கம் தவிர, தேனி பிரஸ் கிளப், சென்டர் பார் பாவர்ட்டி எராடிகேஷன், ஊரக மேம்பாட்டுக்கான பெண்கள் நடவடிக்கை சங்கம், தேனி தாலுகா கிராம பொதுமக்கள் நலச் சங்கத்தின் பெயர்களும் பதி வேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x