Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM

பாஜகவின் வேட்பாளராகிறார் கலாம் அண்ணன் மகன்?

ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய பகுதி யாகும். ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அறந் தாங்கி மற்றும் திருச்சுழி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளிலும் பெருவாரியாக முஸ்லிம்கள் பதவி வகிக்கின்றனர்.

இதனால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளர்களை இத்தொகுதியில் நிறுத்த ஆர்வம் காட்டி வருகின்றன.

திமுக கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சியும், முஸ்லிம் லீக்கும் ராமநாதபுரம் தொகுதியைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கின்றன. அதிமுக தரப்பில் அன்வர்ராஜா களமிறக்கப்படுவார் எனவும் சொல்லப் படுகிறது.

காங்கிரஸ் தரப்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன்அலி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஜே.எம்.எச். ஹசன் மவ்லானா ஆகியோரும் ராமநாதபுரத்தில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தரப்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அண்ணன் மகனும், பாஜகவின் தமிழக சிறுபான்மையினர் பிரிவின் தலைவருமான ஏ.பி.ஜெ.எம். ஹாஜா செய்யது இப்ராகிமை களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x